Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லட்சக்கணக்கில் பணம்.. தாட்கோ பலன்கள்.. சிறுபான்மையினருக்கு மட்டும் கடனுதவி? தமிழக அரசு தந்த விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிற்படுத்தப்பட்டோருக்கு, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் பலனை பெற்று வருகிறார்கள்.. இந்நிலையில், இந்த திட்டம், குறித்து புதிய வதந்தி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.. இந்த வதந்தியை மறுத்து, தமிழக அரசு விளக்கம் ஒன்றை தந்துள்ளது. என்ன நடந்தது?

தமிழகத்திலுள்ள ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.. உதாரணத்துக்கு, ஆதிதிராவிடர் வீட்டு வசதி கடனுதவி திட்டம் என்பது தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாகும்.

tahdco TN government loan assistance

இந்த திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு சொந்தமாக நிலம் வாங்குவதற்கும், வீடுகள் கட்டுவதற்கும், வீடுகளை பழுதுபார்ப்பதற்கும் கடனுதவி வழங்கப்படுகிறது.

சாதி சான்றிதழ்

இதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவராக இருத்தல், குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் போன்ற தகுதிகள் இந்த திட்டத்திற்கு தேவை. விண்ணப்பதாரரின் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் போன்ற ஆவணங்கள் தேவைப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காகவும், சொந்தமாக நிலம் மற்றும் வீடுகள் வாங்கும் மக்களின் கனவை நனவாக்குவதற்காகவும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டதாகும்.

அதேபோல, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினர்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், விராசாத் (கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம்) மற்றும் கல்விக் கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

கடனுதவி திட்டங்கள்

இதில், திட்டம் 1-ன் கீழ் தனிநர் கடன் ஆண்டிற்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.20,00,000மும், திட்டம் 2-ன் கீழ் ஆண்டுக்கு 8 சதவீத பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில், அதிகபட்ச கடனாக ரூ.30,00,000 மும் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதமும், பெண்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000 லட்சம் வழங்கப்படுகிறது.

மேலும், சிறுபான்மையின மாணவ, மாணவியர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுநிலை, தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம்-1 ன் கீழ் ரூ.20,00,000ம் வரையில் 3 சதவீத வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதமும், மாணவியருக்கு 5 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.30,00,000 வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

உபகரணங்கள், கருவிகள்

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு விராசாத் கடன் (கைவினை கலைஞர் கடன் திட்டம்) கைவினை கலைஞர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் மூலப்பொருட்களான உபகரணங்கள், கருவிகள், இயந்திரங்கள் வாங்குவதற்கு இக்கடன் வழங்கப்படுகிறது.

இதில் பயன்பெற, கடன் விண்ணப்பத்துடன், மதச்சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ்,ரேஷன் அட்டை அல்லது இருப்பிடச் சான்று, ஆதார், திட்ட அறிக்கை மற்றும் கடன் வழங்கும் வங்கி கோரும் ஆவணங்கள் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல் கல்விக் கடனுக்கு இவற்றுடன் கல்வி நிறுவனம் வழங்கும் சான்றிதழ்கள் இணைக்க வேண்டும்.

தமிழக அரசு மறுப்பு

இப்படிப்பட்ட சூழலில், அரசு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் ரூ.30 லட்சம் வரை கடன் திட்டத்தை அறிவித்துள்ள நிலையில், சிறுபான்மையினருக்கு மட்டும் தமிழ்நாடு அரசு கடனுதவி வழங்குவதாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், இந்த தகவலை தமிழக அரசு மறுத்துள்ளது.

"பிற்படுத்தப்பட்டோருக்கு, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் வீட்டு வசதி, மேம்பாட்டுக்கழகம் மூலமாகவும் கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதை மறைத்து சிறுபான்மையினருக்கு மட்டும் அரசுக் கடன் வழங்குவதாகப் பொய்யான தகவலைப் பரப்பி வருகிறார்கள்" என்று செய்திக்குறிப்பு வெளியிட்டு தெளிவுப்படுத்தியிருக்கிறது. அத்துடன் நிலவிவரும் வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+