ஆசையாய் முதலிரவுக்கு காத்திருந்த மாப்பிள்ளை.. வெட்கத்தில் தாசில்தார் சந்தியா.. அடுத்து நடந்த கொடுமை
சென்னை: ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ள ஒரு கொடூரமான சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.. ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட ஒரு நபர், கௌரவக் கொலை என்று சந்தேகிக்கப்படும் ஒரு கொடூரமான சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. என்னதான் நடந்தது?
கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டபேட்டா மண்டலத்திற்கு உட்பட்டது வேமுலபள்ளி என்ற கிராமம்.. இங்கு பொலிபள்ளி சூர்யபிரகாஷ் என்ற 41 வயது நபர் சடலமாக கிடந்துள்ளார்.. 41 வயதான இவர், யாரென்று போலீசார் விசாரணையில் இறங்கினார்கள்..
அப்போதுதான், ராயவரத்தில் துணை வட்டாட்சியராகப் பணியாற்றி வரும் சந்தியா (40) என்பவரின் கணவர் என்பதும், கடந்த வியாழக்கிழமை அன்னவரம் கோயிலில் இவர்கள் 2 பேருமே காதல் திருமணம் செய்துகொண்டதும் தெரியவந்தது..

பதற்றம் - கௌரவக் கொலை
திருமணம் முடிந்து 2 நாளிலேயே சூர்யபிரகாஷ் வெட்டிக்கொல்லப்பட்ட இந்த அதிர்ச்சிகரமான செய்தி, ஆந்திரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.. பிறகு போலீசார் விசாரணையை துவங்கினார்கள்.. ஆரம்பக்கட்ட விசாரணையிலேயே, இது ஒரு கௌரவக் கொலை என்று போலீசார் வலுவான சந்தேகத்தை முன்வைத்தனர்..
அதாவது, சந்தியாவும்ஹ, சூர்யபிரகாஷூம் உயிருக்கு உயிராக காதலித்துள்ளனர்.. இவர்களது திருமணத்துக்கு சந்தியா வீட்டில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.. அதனால் காதலர்கள் இருவரும் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.. திருமணம் முடிந்ததுமே, அந்த கல்யாண போட்டோவை சந்தியா தன்னுடைய அண்ணன்களுக்கு செல்போனில் அனுப்பினாராம்.. அதை பார்த்து அண்ணன்கள் கொந்தளித்து போயிருக்கிறார்கள்..
முதலிரவு மாப்பிள்ளை
சூர்யபிரகாஷ் வேலையில்லாமல் சுற்றி வருகிறாரே? அவரை ஏன் கல்யாணம் செய்கிறாய்? என்று தங்கையிடம் கோபப்பட்டுள்ளனர். எப்படியும் முதலிரவு கொண்டாட, தன்னுடைய வீட்டிற்குதான் சூர்யபிரகாஷ் செல்வார் என்று முடிவுசெய்த சந்தியாவின் அண்ணன்கள், அங்கேயே அவரை வெட்டி சாய்த்துவிட வேண்டும் என்று மறைந்திருந்து காத்திருந்தார்களாம்..
எதிர்பார்த்தபடியே அன்றைய தினம் இரவு சுமார் 11:30 மணி அளவில், துவாரபூடி கிராமத்தில் உள்ள பிரகாஷ் சந்தியாவுடன் முதலிரவு கொண்டாட தன்னுடைய வீட்டிற்கு சென்றுள்ளார்.. அப்போதுதான் மறைந்திருந்த அண்ணன்கள், மாப்பிள்ளையை கற்களாலேயே தாக்கி மிகக் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.. இந்த தாக்குதலில் சூர்யபிரகாஷ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்..
போஸ்ட் மார்ட்டம்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மண்டபேட்டா ஊரக சப்-இன்ஸ்பெக்டர் வி. கிஷோர், சி.ஐ. பி. டோரா ராஜு மற்றும் போலீசார், உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. மேலும், கிழக்கு மண்டல டி.எஸ்.பி. வித்யா குற்றச் சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்..
இந்த கொடூரமான கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.. மற்றொருபுறம் சூர்யபிரகாஷின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், சந்தியாவின் சகோதரர்கள் உள்ளிட்ட கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்..
விரைவில் கைது
இந்த படுகொலை சம்பவம் குறித்து சி.ஐ. டோரா ராஜு சொல்லும்போது, சந்தியாவின் சகோதரர்கள் மற்றும் அவர்களுக்கு உதவிய மற்றொரு நபர் என மொத்தம் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்..
இந்த கொலைக்குக் காரணமானவர்கள் யார், இதற்குப் பின்னால் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. சம்பவம் நடந்த இடத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.. இது குறித்த மேலும் பல தகவல்கள் போலீசார் விசாரணையின் முடிவிலேயே தெரியவரும்" என்கிறார்..
எனினும், கௌரவக் கொலைகள் சமூகத்தில் இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி வருகிறது..!!!
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு












Click it and Unblock the Notifications