Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாம்பரத்தில் காரை கடனில் எடுத்து 14 லட்சம் சம்பாதித்த அதிமுக பிரமுகர்.. நிதி நிறுவனத்திற்கு ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேற்கு தாம்பரம் - திருநீர்மலை சாலையை சேர்ந்த லோகேஷ் என்ற கிஷோர் என்பவர் அதிமுக பிரமுகர் ஆவார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 14 லட்சம் கடன் பெற்று சொகுசு கார் ஒன்றை வாங்கினர். முதல் 5 மாதங்கள் மட்டுமே மாதத் தவணையை கட்டியவர்கள் அதன் பிறகு கட்டவில்லை. ஆனால் கடனை கட்டியது போல் மோசடியாக என்ஓசி பெற்று, அந்த காரை வைத்து 14 லட்சம் கடன் வாங்கி இருக்கிறாராம். எனவே அதிமுக பிரமுகர் கிஷோரை போலீசார் கைது செய்தனர். உதவி செய்த நிதி நிறுவன ஊழியர்களை தேடி வருகிறார்கள்.

காரை இஎம்ஐக்கு எடுத்து அதனை கட்டாமல், கடனை கட்டியதாக என்ஓசி பெற்று, அடகு வைத்து பணம் பெறுவது என்பது சாத்தியமா என்றால் .. எதார்த்ததில் சாத்தியமே இல்லை.. ஆனால் இந்த மிகப்பெரிய ஆவண மோசடி சென்னையில் நடந்துள்ளது. அந்த மோசடியின் மூலம் 14லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளார் அதிமுக பிரமுகர் கிஷோர்.

Tambaram AIADMK member earns 14 lakhs by taking car on loan from a famous finance company


இஎம்ஐ கார்

ஒரு கார் கடனில் இருக்கும்போது, அதன் ஆர்.சி (RC Book) புத்தகத்தில் அந்த நிதி நிறுவனத்தின் பெயர் 'Hypothecation' (HP) என்ற பகுதியில் இருக்கும். அந்தப் பெயரை நீக்காமல் காரை விற்கவோ அல்லது வேறு எங்கும் அடகு வைக்கவோ முடியாது. வங்கியின் லெட்டர் பேட், முத்திரை மற்றும் அதிகாரிகளின் கையொப்பம் ஆகியவற்றைத் தவறாகப் பயன்படுத்தி போலி என்ஓசி தயாரித்துள்ளார். அத்துடன் வங்கி மென்பொருளில் தற்காலிகமாக அந்த லோன் கணக்கு முடிவடைந்தது போலக் காட்டியிருக்கலாம்.

கடன் இல்லாத நிலை

வங்கியிடம் இருந்து பெறப்பட்ட அந்தப் போலி என்ஓசி-ஐ வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளார்கள். RTO-வில் ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரிடையாகவோ அந்த ஆவணத்தைச் சரிபார்க்கும்போது, போலி ஆவணம் உண்மை என நம்பப்பட்டால், ஆர்.சி புத்தகத்தில் இருந்த நிதி நிறுவனத்தின் பெயர் (HP) நீக்கப்படும். இதனால் அந்தக் கார் எந்தக் கடனும் இல்லாத 'Clean' காராக மாறிவிடும்.

கடன் வாங்கி மோசடி

அதன்பிறகு கார் கிஷோர் பெயரில் முழு உரிமையுடன் (No Dues) இருக்கும். ஆர்.சி புத்தகத்தில் வேறு எந்த வங்கியின் பெயரும் இருக்காது. இதனைப் பயன்படுத்தி வேறொரு புதிய தனியார் நிதி நிறுவனத்திற்குச் சென்று, காரின் புதிய ஆர்.சி புத்தகத்தைக் காட்டி "எனக்கு அவசரமாகப் பணம் தேவை, இந்தக் காரின் மீது கடன் கொடுங்கள்" என வாங்கி ஏமாற்றி உள்ளார். இதுபற்றி விரிவாக பார்ப்போம்.

மேற்கு தாம்பரம்

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் - திருநீர்மலை சாலையை சேர்ந்தவர் லோகேஷ் என்ற கிஷோருக்கு 34 வயது ஆகிறது. அ.தி.மு.க. பிரமுகரான இவரது மனைவி திவ்யா (32). இவர்கள், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 14 லட்சம் கடன் பெற்று சொகுசு கார் ஒன்றை வாங்கினர். முதல் 5 மாதங்கள் மட்டுமே மாதத் தவணையை கட்டியவர்கள் அதன் பிறகு கட்டவில்லை என்று கூறப்படுகிறது

14 லட்சம் கடன்

இதுபற்றி நிதி நிறுவனம் சார்பில் நடத்திய விசாரணையில், நிதி நிறுவனத்தில் வேலை செய்து வரும் குரோம்பேட்டையை சேர்ந்த விக்னேஷ் மற்றும் திரிசூலத்தைச் சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் உதவியுடன் கிஷோர் - திவ்யா தம்பதி நிதி நிறுவனத்தில் முழு கடனையும் அடைத்துவிட்டது போல போலியான சான்றிதழை தயார் செய்தார்களாம். அதை தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அளித்து தங்களது காருக்கு எந்த கடனும் இல்லை என என்.ஓ.சி. பெற்றதும், மீண்டும் வேறொரு தனியார் நிதி நிறுவனத்தில் காரை அடமானம் வைத்து ரூ. 14 லட்சம் பெற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதிமுக பிரமுகர் கைது

இதுபற்றி தனியார் நிதி நிறுவன மேலாளர் ரவி (32) அளித்த புகாரின்பேரில் தாம்பரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அ.தி.மு.க. பிரமுகர் கிஷோரை அதிரடியாக கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய கிஷோரின் மனைவி திவ்யா, தனியார் நிதி நிறுவன ஊழியர்களான விக்னேஷ் மற்றும் பல்லாவரம் விக்னேஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+