தாம்பரம் தடுமாறுது.. அப்பார்ட்மென்ட்டில் யாரந்த மனிதர்? "கல்லாகி" போன பெண்கள்.. சென்னை போலீஸ் தவிப்பு
சென்னை: எப்பேர்ப்பட்ட கொடூரர்களாக இருந்தாலும், அவர் மரணித்துவிட்டால் அவரது தவறுகளும் சேர்ந்தே மன்னிக்கப்பட்டுவிடுகின்றன.. அல்லது மறக்கப்பட்டு விடுகின்றன. அந்தவகையில், மனிதனின் இறுதியே அவரது மரணம் என்றபோதிலும், சிலரது தவறுகள் மன்னிக்கப்படுவதில்லை.. அப்படிப்பட்ட சோக சம்பவம் ஒன்று சென்னை தாம்பரத்தில் நடந்துள்ளது.
கிழக்கு தாம்பரம் பகுதியில் அந்த நபர் வசித்து வருகிறார்.. இந்த பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வருகிறார். 50 வயதாகிறது.. இவர் தனியார் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்..

திருமணம்: கல்யாணமாகிவிட்டது.. ஒரு மகள் இருக்கிறார்... ஆனால், இந்த சாப்ட்வேர் ஊழியருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. எனவே, திருமணமாகி சில வருட காலம் மட்டுமே, மனைவி இவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.. அதற்கு பிறகு கணவரின் போக்கு பிடிக்காமல், குடிபோதையையும் விடாத காரணத்தினால், பிரிந்து சென்று விட்டார். எனவே, மகள் மட்டும் அப்பாவுடன் தங்கியிருந்தார்.. ஒருகட்டத்தில் தன்னுடைய கல்லூரி படிப்பையும் முடித்தார்..
ஆனால், நாளடைவில் அப்பாவுக்கும், மகளுக்கும் மனக்கசப்பு அதிகரித்தது.. அதனால், அப்பாவை பிரிந்து அந்த பெண், தன்னுடைய பாட்டி வீட்டுக்கு சென்றுவிட்டாராம்.
குடிபோதை: இப்போது மென்பொருள் நிறுவன ஊழியருக்கு எந்த உறவுகளும் இல்லை.. சொந்த பந்தங்களும் இல்லை.. இதனால், கடந்த 5 மாதங்களாக வேலைக்கும் போகாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.. எந்நேரமும் குடித்து கொண்டே இருந்திருக்கிறார்.. இவரை கண்டிக்கவோ, தட்டிக்கேட்கவோ, மனைவியும், மகளும் இல்லாமல், அளவுக்கு அதிகமான மதுப்பழக்கத்திற்கு ஆளாகிவிட்டார்.. அதாவது 5 மாதமாக வேலைக்கு செல்ல முடியாத அளவுக்கு மதுவே கதி என்று கிடந்தாராம்.
இந்நிலையில் நேற்று காலை, அவர் வசிக்கும் அப்பார்ட்மென்ட் பார்க்கிங் பகுதியில், மது போதையில் விழுந்து கிடந்திருக்கிறார்.. அவரை பார்த்து பரிதாபப்பட்ட அப்பார்ட்மென்ட்வாசிகள், காலையிலேயே ரோட்டில் விழுந்து கிடப்பதை கண்டு பரிதாபப்பட்டனர்.. பின்னர் அவரை மீட்டு வீட்டிற்குள் கொண்டுவந்து விட்டு சென்றிருக்கிறார்கள்..
வீட்டு உரிமையாளர்: ஆனால், நேற்று இரவு வரை, அந்த நபர் வீட்டை விட்டு வெளியே வரவேயில்லை.. இதனால், குடியிருப்புவாசிகள் சந்தேகம் அடைந்து, வீட்டின் உரிமையாளருக்கு விஷயத்தை சொல்லியிருக்கிறார்கள்..
உடனே வீட்டு உரிமையாளரும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்துள்ளார்.. சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸில் வந்த மருத்துவ பணியாளர்கள் வீட்டுக்குள் கிடந்த அந்த நபரை பரிசோதித்து பார்த்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர்.. இதையடுத்து, சேலையூர் போலீசார் விரைந்து வந்து அந்த நபரின் சடலத்தை மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டத்துக்காக பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மாமியார்: பின்னர், அந்த நபர் உயிரிழந்தது குறித்து குடும்பத்தினரிடம் சொல்லவும், சடலத்தை ஒப்படைக்கவும் போலீசார் முயன்றுள்ளனர்.. ஆனால், இவரது மனைவி எங்கே என்று தெரியவில்லை. அதனால், மாமியார் வீட்டுக்கு தகவல் சொல்லி உள்ளார்கள். ஆனால், மாமியார் அதை பற்றி கவலையே படவில்லையாம்.
எனவே, அவரது மகளுக்கு தொடர்பு கொண்டு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த பெண்ணோ, தனக்கு அப்பா தேவையில்லை என்று சொல்லி படக்கென் செல்போனை கட் பண்ணிவிட்டாராம். மீண்டும் போலீசார் முயற்சித்தபோது, செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டாராம். இதனால் என்ன செய்வதென்றே தெரிரியாமல் அப்பாவின் சடலத்தை ஒப்படைக்க அவரது மகளை தேடி கொண்டிருக்கிறார்களாம்.
பரிதாபம்: முதலில் மனைவியை பிரிந்து, அடுத்து மகளையும் பிரிந்து, இறுதியில் குடிபோதைக்காக தன் உயிரையும் விட்டுள்ளார் இந்த சாஃப்ட்வேர் என்ஜினியர்.. என்ன படித்து என்ன பயன்? பெற்ற மகள்கூட சடலத்தை வாங்க மறுத்துள்ளார்.. இந்த பாழாய்ப்போன குடிபோதை இன்னும் எத்தனை உயிரை காவு வாங்க போகிறதோ???
-
சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்!












Click it and Unblock the Notifications