தாம்பரம் கேம்ப் ரோடு முட்டு சந்து.. ரேபிடோ டிரைவர் வாழ்நாளில் மறக்க மாட்டார்.. அவர் அனுபவம் அப்படியே
சென்னை: வெறும் பொழுதுபோக்கிற்காக சென்ற பயணம், இப்படியொரு பயத்தை ஏற்படுத்தும் என்று ஒரு ரேபிடோ இளைஞர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். தாம்பரம் சேலையூர் அருகே தனக்கு நேர்ந்த விசித்திரமான அனுபவத்தை ரேபிடோ ஓட்டுநர் ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறது. இது சக வாகன ஓட்டிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
வார இறுதி நாட்களில் பகுதிநேரமாக ரேபிடோ ஓட்டும் அந்த இளைஞருக்கு, தாம்பரம் சேலையூர் கேம்ப் ரோடு பகுதியில் ஒரு ரைடு வந்துள்ளது. ஜிபிஎஸ் வரைபடத்தைப் பின்பற்றி அவர் சென்ற இடம், ஒரு கட்டத்திற்கு மேல் அடர்ந்த மரங்கள் மற்றும் செடிகள் நிறைந்த 'டெட் எண்ட்டில் அதாவது முட்டுச்சந்தாக இருந்துள்ளது. "மேப் உள்ளே காட்டுகிறது, ஆனால் முன்னால் செல்ல வழியே இல்லை" என்று குழப்பத்தில் நின்றபோதுதான் அந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.

45 வயது நபர்
சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், செல்போனையே பார்த்துக் கொண்டு அந்த முட்டுச்சந்துக்குள் மிக வேகமாகச் சென்றுள்ளார். சந்தேகம் அடைந்த ஓட்டுநர், வாடிக்கையாளரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது 'நொட் ரீச்சபிள்' என்றே வந்திருக்கிறது
எஸ்கேப்
சிறிது நேரத்தில் உள்ளே சென்ற அந்த நபர் மீண்டும் வெளியே வந்து, ஓட்டுநரை ஒருவிதமாகப் பார்த்தபடி நின்ற அந்த நொடி, ஓட்டுநருக்கு ஏதோ விபரீதம் நடக்கப் போவதை உணர்த்தியுள்ளது. தனது உள்ளுணர்வு சொன்ன எச்சரிக்கையை ஏற்று, உடனடியாக அந்தப் பயணத்தை ரத்து செய்துவிட்டு அவர் அங்கிருந்து தப்பியிருக்கிறார்.

ரேபிடோ ஓட்டுநர் பதிவு
இதுபற்றி ரேபிடோ ஓட்டுநர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில் கூறுகையில், "வார இறுதி வந்தாலே சும்மா பொழுதுபோக்கிற்காக ரேபிடோ ஓட்டுவேன். நேற்றும் அப்படித்தான்... கேம்ப் ரோடு பக்கம் ஒரு பயணம் வந்தது. குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றதும் ஒரு வித்தியாசமான உணர்வு. மேப் உட்புறமாகக் காட்டுகிறது... ஆனால் முன்னால் முழுதும் முடிவே இல்லாத பாதை . சுற்றி முழுக்க மரம், செடி... "இதுக்கு மேலே எங்கே போறது?" என்று அப்படியே நின்று காத்துக்கொண்டிருந்தேன்.
அப்போதுதான் எதிரே இருந்து ஒரு 45 வயது மதிக்கத்தக்க ஒருவர், செல்போனை பார்த்துக்கொண்டே வேகமாக வந்து, நேராக அந்தப் பாதையின் முட்டுச்சந்துக்குள் சென்றுவிட்டார். அழைத்தேன் - ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
போக வேண்டாம்
ரேபிடோ நண்பர்களே, தெரியாத உட்புற இடங்களுக்குக் குருட்டுத்தனமாகப் போகாதீர்கள். அழைப்பு இணையவில்லை என்றால் அந்த இடத்திற்குச் செல்லாதீர்கள். உங்கள் உள்ளுணர்வு சொல்வதைப் புறக்கணிக்காதீர்கள். பாதுகாப்புதான் முதல் முக்கியத்துவம்... பயணம் அடுத்தது." இவ்வாறு கூறியுள்ளார்.
உங்கள் உள் உணர்வு சொல்வதை கேளுங்கள்
இந்த சம்பவங்களை பார்க்கும் போது, வரைபடம் காட்டினாலும், தெரியாத உட்புற இடங்களுக்கு குருட்டுத்தனமாக போக வேண்டாம். வாடிக்கையாளரைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாவிட்டால், அந்த இடத்தை நோக்கி நகர வேண்டாம். உங்கள் மனம் "ஏதோ சரியில்லை" என்று எச்சரித்தால், தயங்காமல் அங்கிருந்து வெளியேறிவிடுங்கள். பாதுகாப்பு என்பது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் சமமாக முக்கியமானது நண்பர்களே..
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications