தாம்பரம் அருகே மது அருந்திய நண்பர்கள்.. அடுத்த நொடி சக நண்பனுக்கு நடந்த கொடூரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாம்பரம் மணிமங்கலம் அருகே நண்பர்களுடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் சக நண்பனை கல்லால் அடித்து கொலை செய்த 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். உயிரிழந்த விஜயகுமார், கோகுல், மாதவன் ஆகிய மூவர் மீதும் மணிமங்கலம் காவல் நிலையத்தில் அடிதடி ,கொலை முயற்சி, உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அடுத்த மணிமங்கலம் அருகே காஞ்சிவாக்கம் எம்.ஜி.ஆர்., தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (25). இவர் ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்களான கோகுல், மாதவன் ஆகியோருடன் சேர்ந்து விஜயகுமார் மது அருந்தியுள்ளார். அப்போது இவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

Tambaram Horror Man Bludgeoned to Death by Friends During Drunken Brawl Near Manimangalam

அப்போது கோகுல் மனைவி குறித்து, விஜயகுமார் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக போலீஸ் விசாரணையில் தெரிய வருகிறது. இதன் காரணமாக விஜயகுமார் மீது கோபமடைந்த கோகுல், தம்பி மாதவனுடன் சேர்ந்து அருகில் இருந்த கல்லை எடுத்து விஜயகுமாரின் தலையில் பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் நிலை குலைந்து ரத்த வெள்ளத்தில் கீழே மயக்கமடைந்து விழுந்த விஜயகுமாரை அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு அழைத்துச் சென்று அரசு செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு விஜயகுமாருக்கு தீவிர சிகிச்சை அளித்த போதிலும் சிகிச்சை பலனின்றி தற்போது பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த விஜயகுமார், கோகுல், மாதவன் ஆகிய மூவர் மீதும் மணிமங்கலம் காவல் நிலையத்தில் அடிதடி ,கொலை முயற்சி, உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற மணிமங்கலம் போலீசார் விஜயகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியில் மதுபோதையில் கட்டிடத் தொழிலாளர்கள் இடம் மாறித் தூங்கிக் கொண்டிருந்த போது, தொழிலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்தவர் குமார். சுகாதாரத்துறை ஊழியரான இவர், அய்யனடைப்பு பகுதியில் தனக்குச் சொந்தமான நிலத்தில் வீடு கட்டி வருகிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மனோகரன், சந்திரன், ஜோஸ், மெர்லின், சசி உள்ளிட்ட 10 பேர் தங்கி வீடு கட்டும் வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் தினமும் காலை முதல் மாலை வரை அங்கு கட்டிட வேலை செய்துவிட்டு இரவில் இதே வீட்டிற்கு எதிரே உள்ள ஒரு கட்டிடத்தில் தங்கி வந்தனர். இந்த நிலையில், கடந்த 27ம் தேதி இரவு அனைவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது சந்திரனுக்கும், மற்றொரு தொழிலாளரான மெர்லினுக்கும் மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

சக தொழிலாளர்கள் இருவரையும் விலக்கி விட்டுள்ளனர். இருப்பினும், ஆத்திரம் குறையாத சந்திரன், நள்ளிரவில் திடீரென எழுந்து மெர்லினைத் தேடியுள்ளார். அப்போது அங்கு படுத்திருந்த மனோகரனை மெர்லின் என நினைத்து சென்ட்ரிங் கட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் மனோகரன் உயிரிழந்தார். இந்த நிலையில், காலையில் எழுந்த சக கட்டிடத் தொழிலாளர்கள் போர்வையால் மூடப்பட்டிருந்த மனோகரனை எழுப்பிய போது தான் மனோகரன் உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய போலீஸார், சந்திரனைக் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+