தாம்பரத்தில் நடந்த "சுமூகம்".. சென்னையில் தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக் கையோடு வாபஸ்.. இதுதான் காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இன்று ஆரம்பிக்கவிருந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு, டேங்கர் லாரிகள் மூலம்தான் தினந்தோறும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது...

 Chennai water tanker owners starts Indefinite strike from today and 4 districts will affect including Chengalpattu

அதேபோல வீடுகளை தவிர, நிறுவனங்கள், கடைகள், மருத்துவமனைகளுக்கு தேவையான தண்ணீரையும், பெரும்பாலும் இந்த டேங்கர் லாரிகள் தான் வழங்கி வருகின்றன.

தண்ணீர் லாரிகள்: இந்நிலையில், தண்ணீர் லாரி உரிமையாளர்கள் திடீரென்று இன்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக் அறிவித்துள்ளனர்.. காரணம், தண்ணீர் எடுக்கும் போர்வெல்லுக்கு அரசிடம் லாரி உரிமையாளர்கள் அனுமதி கேட்டார்களாம்.. ஆனால் அரசு சார்பில் அவர்களின் கோரிக்கை எதுவும் பரிசீலிக்கப்படவில்லை என தெரிகிறது. எனவே, தண்ணீர் எடுக்கும் போர்வெல்லை அனுமதிக்க, அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இந்த வேலை நிறுத்தத்தை 2 நாட்களுக்கு முன்பு அறிவித்தனர்.

அதன்படியே, இன்றைய தினம், அதாவது ஆகஸ்ட் 30 முதல் தொடர் வேலை நிறுத்தத்தை தண்ணீர் லாரி ஓனர்கள் கையில் எடுத்துள்ளனர்.. இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அன்றைய தினம் தண்ணீர் டேங்கர் லாரிகள் ஓடாது என்றும் அறிவித்துள்ளனர்.

போராட்டம் தொடரும்: சென்னை புறநகரில் இன்று முதல் 15 ஆயிரம் தனியார் தண்ணீர் லாரிகள் ஓடாது என்றும், முறையான அனுமதி வழங்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் கறாராக அறிவிக்கப்பட்டுள்ளது...

இந்த ஸ்டிரைக் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தண்ணீர் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது... இதனால், மருத்துவமனைகள், உணவு விடுதிகள், ஓட்டல்களில் தண்ணீர் தட்டுப்பாடு வர வாய்ப்புள்ளது.. மேலும், ஓஎம்ஆர், ஈசிஆர் என சென்னையின் புறநகர்ப்பகுதிகளிலுள்ள குடியிருப்புவாசிகளுக்கும், இந்த லாரி நிறுத்தத்தினால், நிறையவே பாதிப்புகள் வரக்கூடும் என தெரிகிறது.

பரபரப்பு: இதனால், சென்னையின் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்ட மக்கள், குடிநீர் இல்லாமல் அவதிக்கு ஆளாக நேரிடும்.. இதனால், தண்ணீர் லாரி உரிமையாளர்களின் போராட்டத்துக்கு தீர்வு காண வேண்டும், தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்க அரசு சார்பில் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அரசுக்கு 2 நாட்களாகவே கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+