தாம்பரத்தில் ஷாக்.. கருக்கலைப்பு விவகாரம்.. பலே வேலை.. பெண் இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்
சென்னை: மருத்துவரை மிரட்டி லஞ்சம் வாங்கியதாக செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மகிதாவை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
காட்டாங்குளத்தூரை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யதாக கூறி, அரசு மருத்துவரை மிரட்டி 12 லட்சம் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் இன்ஸ்பெக்டர் மகிதாவை சஸ்பெண்ட் செய்து, தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் என்ன நடந்தது, என்பதை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மகளிர் நிலைய காவல் ஆய்வாளராக மகிதா அன்னகிருத்தி என்பவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்து தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரமானது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காட்டாங்குளத்தூரைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ஒரு நபர் ஆசை வார்த்தை கூறி கர்ப்பம் அடைய செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
17 வயது பெண்ணை கர்ப்பம் ஆக்கியதாக ரஞ்சித் என்பவரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் தனியார் மற்றும் அரசு மருத்துவர்களிடம் சென்று அந்த சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ததாக போலீசாரிடம் அந்த சிறுமியின் தாய் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ரஞ்சித் மீது போக்கோ வழக்கினை பதிவு செய்த கூடுவாஞ்சேரி காவலர்கள் அவரை சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து கருக்கலைப்பு செய்யதாக கூறப்படும் அரசு மருத்துவரிடம் 10 லட்சம் ரூபாய் பணமும், தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்யதாக 2 லட்சம் பணமும் என 12 லட்சம் ரூபாய் பணத்தை மருத்துவர்களை மிரட்டி கூடுவாஞ்சேரி மகளிர் நிலைய காவல் ஆய்வாளர் மகிதா வாங்கியதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 12 லட்சம் ரூபாய் பணத்தை மருத்துவர்களை மிரட்டி கூடுவாஞ்சேரி மகளிர் நிலைய காவல் ஆய்வாளர் மகிதா வாங்கினாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இன்ஸபெக்டர் மகிதாவை சஸ்பெண்ட் செய்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications