ரூ 4 கோடி பணம் பறிமுதல்! நயினார் நாகேந்திரன் ஏப்ரல் 22 ல் ஆஜராக தாம்பரம் போலீஸ் சம்மன்
சென்னை: ரூ 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நெல்லை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஏப்ரல் 22 ஆம் தேதி ஆஜராகுமாறு தாம்பரம் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கடந்த 6-ஆம் தேதி இரவு சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது அந்த ரயிலில் 3 பேர் 3.99 கோடி ரூபாயை உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாமல் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் புரசைவாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் பணியாற்றும் சதீஷ், நவீன், லாரி ஓட்டுநர் பெருமாள் என தெரியவந்தது. அவர்கள் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.
இந்த ரூ4 கோடி பணம் பறிமுதல் விவகாரத்தில் பாஜக தொழில்துறை பிரிவு தலைவர் கோவர்த்தனன் என்பவருக்கு தாம்பரம் மாநகர காவல் துறை சம்மன் அனுப்பியது. சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள கோவர்த்தனுக்கு சொந்தமான உணவகத்தில் இருந்து ரூ 4 கோடி பணம் கைமாற்றப்பட்டது தெரியவந்தது.
இந்த நிலையில் ரூ 4 கோடி பணம் பறிமுதல் தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்ப போலீஸார் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் தனக்கு எந்த சம்மனும் வரவில்லை என நயினார் நாகேந்திரன் நேற்றைய தினம் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஏப்ரல் 22 ஆம் தேதி தாம்பரம் காவல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நயினார் வீட்டில் இல்லாததால் அவருடைய உறவினரிடம் அந்த சம்மன் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications