தாம்பரம் பக்கம் போயிடாதீங்க.. இதை நோட் பண்ணிக்குங்க.. AC வேற ரெடியாகுது.. தெற்கு ரயில்வே அதிரடி
சென்னை: சென்னை, தாம்பரம் - மங்களூரு உட்பட 4 சிறப்பு ரயில்கள் குறித்து தெற்கு ரயில்வே முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருக்கிறது.
பயணிகளின் வசதிக்காகவே புதுப்புது அறிவிப்புகளையும், வசதிகளையும் தெற்கு ரயில்வே அமல்படுத்தியவாறே உள்ளது.. இதில், சென்னையை பொறுத்தவரை பொதுப்போக்குவரத்துக்கு எப்போதுமே முக்கியத்துவம் அதிகமாகவே இருந்து வருகிறது..

மாநகர பஸ்கள், மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டாலும் புறநகர் மின்சார ரயில்கள் பொதுப்போக்குவரத்தில் மிக முக்கியமான பங்கினை வகித்து வருகிறது. சென்னை கடற்கரை மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களிலிருந்து தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
பராமரிப்பு பணிகள்: எனவே, தினந்தோறும் சென்னையின் புறநகர் பகுதிகளிலிருந்து, வேலை நிமித்தமாக, பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த ரயில்களால் பயனடைந்து வருகிறார்கள்.. அதனால்தான், பராமரிப்பு பணிகள் என்று வந்துவிட்டால், ரயில் பயணிகள் அத்தனை பேரும் திணறிவிடுகிறார்கள். சென்னை மின்சார ரயில்கள் ஒரு நாள் ரத்து செய்யப்பட்டாலும்கூட, சென்னை மாநகரம் திண்டாடிவிடுகிறது.
இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ஒரு குட்நியூஸ் வெளியாகியிருந்தது.. அதன்படி, சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் புறநகர் ரயில்களில் AC பெட்டி வசதி கொண்டுவரப்போவதாக தகவல் வெளியானது.. இதற்காக ரயில்வே வாரியம் தெற்கு ரயில்வேக்கு 15 பெட்டிகள் கொண்ட 2 குளிரூட்டப்பட்ட மின் மோட்டார் யூனிட்டுகளை ஒதுக்கியுள்ளதாக அரசின் கொள்கை விளக்க குறிப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டிப்பு மகிழ்ச்சி: இதுவரை சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த விரைவு, ஏசி முன்பதிவு ரயில் பெட்டிகளில் மட்டுமே AC வசதி இருந்த நிலையில், இப்போது சென்னை புறநகர் இடையே இயக்கப்படும் மின்சார ரயில்களில் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது பயணிகளிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
சமீபத்தில்தான், சேலம், ஈரோடு வழியாக, தாம்பரம் - மங்களூரு இடையே குளிர்சாதன வசதியுடன் கூடிய வாரம் 2 முறை இயங்கக் கூடிய சிறப்பு ரயில், இரு மார்க்கத்திலும் கடந்த ஜூன் 7-ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. ரயில்களில் நெரிசலை குறைத்திடுவதற்காக, இப்படியொரு நடவடிக்கையை ரயில்வே மேற்கொண்டுள்ள நிலையில், புறநகர் ஏசி ரயில்களும் விரைவில் பயன்பாட்டுக்கு வரஉள்ளது கூடுதல் மகிழ்ச்சியை தந்துவருகிறது.
தாம்பரம்: இந்நிலையில், தெற்கு ரயில்வே மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அந்தவகையில், பராமரிப்பு பணி காரணமாக சென்னை தாம்பரம்-மங்களூரு சிறப்பு ரெயில்கள் சேவை 2 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது
அதன்படி, தாம்பரம்-மங்களூரு சந்திப்பு சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06047) வருகிற 28-ந்தேதி மற்றும் 30-ந்தேதி ஆகிய 2 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, மங்களூரு சந்திப்பு-தாம்பரம் சிறப்பு ரெயில் (06048) வருகிற 29-ந்தேதி மற்றும் ஜூலை மாதம் 1-ந்தேதி ஆகிய 2 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கும் அந்த அறிவிப்பு இதுதான்:
- சென்னை சென்ட்ரல் - கேரளா மாநிலம் கொச்சுவேலி, மாலை 3:45 மணி ரயில், இன்று மற்றும் ஜூலை 3ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது
- கொச்சுவேலி - சென்னை சென்ட்ரல், மாலை 6:25 மணி ரயில், நாளை மற்றும் ஜூலை 4ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது
- தாம்பரம் - கர்நாடகா மாநிலம் மங்களூரு, மதியம் 1:55 மணி ரயில், வரும் 28, 30ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது
- மங்களூரு - தாம்பரம், பகல் 12:00 மணி ரயில், வரும் 29, ஜூலை 1ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications