"ஓ.. என் மேலயே கை வெக்கறியா".. குடிபோதையில் போலீஸை அடித்த நடிகை பாபிலோனாவின் தம்பி.. அதிரடி கைது
குடிபோதையில் ரகளை செய்த பாபிலோனா தம்பி கைது செய்யப்பட்டுள்ளார்
சென்னை: "என் மேலயே கை வைக்கறியா" என்று போலீஸாரை பார்த்து கேட்டதுடன், பளார் என்று கன்னத்தில் அறைந்து குடிபோதையில் ரகளை செய்துவிட்டார் நடிகை பாபிலோனாவின் தம்பி விக்கி.. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர்!
தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகை பாபிலோனா. இவர் தை பொறந்தாச்சு, உன்னை கொடு என்னை தருவேன், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டமும் உள்ளது.

இவர் சென்னை சாலிகிராமம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார்.. இவரது தம்பி விக்னேஷ் என்கிற விக்கி.. 35 வயதாகிறது. சம்பவத்தன்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாலிகிராமம், தசரதபுரம் 8-வது தெருவில் ஒருவர் போகிற, வருகிற வண்டிகளை மறித்து ரகளைசெய்து கொண்டிருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது.
இதனால் போலீசார் அந்தகுறிப்பிட்ட தெருவுக்குள் போலீசார் நுழைந்தனர்.. அப்போது விக்கி குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தார்.. இதனால் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவர் குடிபோதையில் இருந்ததால் ஸ்டேஷனுக்கு வரும்படி அழைத்தனர்.
உடனே டென்ஷன் ஆகிவிட்ட விக்கி, "ஓ.. என் மேலயே கை வைக்கிறியா... என்னையே பிடிக்கிறியா" என்று சொல்லி ரோந்து வாகன டிரைவர் சங்கரின் கன்னத்தில் பளார் என அறைந்துவிட்டார். இது குறித்து போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு உடனடியாக தகவல் சொல்லப்படவும், தனிப்படை போலீசார் விரைந்து வந்து விக்கியை ஸ்டேஷன் அழைத்து சென்றனர்.
இதையடுத்து சங்கர், தன்னை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியதாக விருகம்பாக்கம் ஸ்டேஷனில் புகார் தரவும், பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலை மிரட்டல், காயம் ஏற்படும் வகையில் தாக்கியது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விக்கியை கைது செய்தனர். இந்த சம்பவத்தினால் சாலிகிராம் பகுதியே பரபரப்பாகிவிட்டது!
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications