“சிண்டிகேட்” - சிக்கிய தயாரிப்பாளர்கள்.. ”அன்போடு” பிடிபடும் பெரும் தலைகள்! சிக்கலில் தமிழ் சினிமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் சிண்டிகேட் அமைத்து தயாரிப்பாளர்கள் வரி ஏய்ப்பு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை அன்பு என்று அழைக்கப்படும் பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தமிழ் மட்டுமின்றி இந்திய அளவிலான சினிமாக்களுக்கு பைனான்ஸ் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் அன்புச்செழியனிடமே கடன் பெற்று திரைப்படங்களை தயாரித்து வருகின்றன.

இந்த நிலையில்தான் கடந்த 4 நாட்களாக அன்பு மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்றது. டெல்லியிலிருந்து வந்த அதிகாரிகள் கடந்த 2 ஆம் தேதி அதிகாலை 5:30 மணி முதல் சென்னை, மதுரையில் உள்ள அன்புச்செழியனின் வீடு, அலுவலகங்கள், சைதாப்பேட்டையில் உள்ள திரையரங்கம், மதுரையில் உள்ள திரையரங்கம் என பல இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

தயாரிப்பாளர்கள்

தயாரிப்பாளர்கள்

இதேபோல், முன்னணி தயாரிப்பாளர்களான சத்யஜோதி தயாரிப்பு நிறுவன தலைவர் தியாகராஜன், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தலைவர் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ், ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவன தலைவர் ஞானவேல் ராஜா, வி கிரியேசன்ஸ் தயாரிப்பு நிறுவன தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா உள்ளிட்டோரின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிரடி சோதனை மேற்கொண்டது.

அறிக்கை

அறிக்கை

மேலும் மதுரை அன்புவிடம் நிதிபெற்ற திரைப்படங்களை தயாரித்த 20 முன்னணி தயாரிப்பாளர்கள் இந்த வருமான வரித்துறை சோதனையில் உட்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியானது. 4 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின் முடிவடைந்ததை தொடர்ந்து வீடுகள், அலுவலகங்களில் நடத்தப்பட்ட பணம் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் அலசி ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டு இருக்கின்றனர்.

 சிண்டிகேட்

சிண்டிகேட்

இதில் ரூ.200 கோடி முறையற்ற வருவாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், ரூ.26 கோடி ரொக்கம் மற்றும் ரூ.3 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. இதேபோல், தயாரிப்பாளர்கள், பைனான்சியர்கள் சிண்டிகேட் அமைப்பை உருவாக்கி வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.

யார் இந்த மதுரை அன்பு?

யார் இந்த மதுரை அன்பு?

சினிமாவுக்கு பைனான்ஸ் செய்வது மட்டுமின்றி கோபுரம் சினிமாஸ் என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களையும் தயாரித்து வந்த இவர், சொந்தமாக திரையரங்கத்தையும் நடத்தி வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் சசிகுமாரின் உறவினரும் தயாரிப்பாளருமான அசோக் குமாரின் தற்கொலைக்கு மதுரை அன்புவே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+