சீமானின் மாஜி தம்பிகளின் தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம், பண்ருட்டி வேல்முருகனின் தவாகவில் இணைந்தது!
சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வலதுகரங்களில் ஒருவராக இருந்த மதுரை வெற்றிக்குமரன் உள்ளிட்டோர் அக்கட்சியில் இருந்து வெளியேறிய தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம், பண்ருட்டி வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தாம் கட்சி தொடங்கும் போது பண்ருட்டி வேல்முருகனைத்தான் தலைவராக இருக்குமாறு கேட்டுக் கொண்டதாக பல முறை கூறியிருக்கிறார். சீமானுக்கு பல்வேறு கட்டங்களில் ஆதரவாக இருந்தவர் வேல்முருகன் எம்.எல்.ஏ.

பாமகவில் இருந்து வெளியேற்றப்பட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியை தொடங்கி நடத்தி வரும் வேல்முருகன், பொதுவாக சீமானை விமர்சிப்பது இல்லை; சீமானும் வேல்முருகனை 'ரத்தம்' என்று உறவாக அழைப்பது வழக்கம். தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே சில மோதல்கள் எழுந்தபோது கூட, யாரையும் விமர்சிக்கக் கூடாது என இருதரப்பும் கட்சியினரை அமைதிப்படுத்தியது.
இந்த நிலையில் அண்மையில் சீமானின் வலதுகரமாக இருந்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான வெற்றிக்குமரன், அக்கட்சியில் இருந்து வெளியேறினார். பின்னர் நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய பல்வேறு முன்னாள் நிர்வாகிகளை ஒருங்கிணைத்து, தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கத்தை உருவாக்கியதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த ஒருங்கிணைப்பு இயக்கத்தின் சார்பாக, திருச்சியில் நவம்பர் 27-ந் தேதி மாவீரர் நாள் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பண்ருட்டி வேல்முருகன் எம்.எல்.ஏ.வும் பங்கேற்றிருந்தார்.
இதனையடுத்து பச்சை தமிழகம் கட்சியை நடத்தி வந்த கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் தமது கட்சியை தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன் இணைப்பதாக அறிவித்தார். தற்போது நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் உருவாக்கிய தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கமும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மதுரை வெற்றிக்குமரன் கூறுகையில், நாங்கள் இதுவரை பின்பற்றி வந்த கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே கொள்கையுடன் அதே இலக்குடனான கட்சிகளில் இணைந்து பயணிக்கலாம் என முடிவு எடுத்தோம். இதில் நாங்கள் தேர்ந்தெடுத்தது பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
பிரபாகரனை எங்களைப் போல தமது தலைவராக ஏற்றுக் கொண்டவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. அவரது கரத்தை வலுப்படுத்த முடிவு செய்துள்ளோம். இன்று முதல் தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம், தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன் இணைந்து செயல்படும். தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன் எங்கள் அமைப்பை முழுமையாக இணைக்கிறோம். இது அதிகாரத்தை நோக்கிய பயணம்தான். தனி ஒரு கட்சியாக அதிகாரத்தை நோக்கி பயணிக்க முடியாது என்பதாலேயே தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன் இணைகிறோம். இவ்வாறு வெற்றிக் குமரன் தெரிவித்தார்.
-
இவ்வளவு ஆதரிச்சதே அதிகம்.. இன்னும் கொஞ்சம் வேணுமாம்! அரசியல் பேரிடர்.. விஜய்யை இறங்கி அடித்த சீமான் -
என்னோட 4% வாக்கு வங்கியை 2% மாத்த இன்னொருத்தன் வந்துட்டானா.. அண்ணாமலையால் புலம்பும் சீமான்.. மீம்ஸ்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு












Click it and Unblock the Notifications