வேற லெவல்.. தமிழர் வரலாற்றை அறிய “கடல் வழிப்பயணம்”! பட்ஜெட்டில் அசத்தல் திட்டத்தை அறிவித்த பிடிஆர்
"இந்த பயணங்கள் நம் இனத்தின் செம்மையான வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு, கைவினைப் பொருட்கள், உணவு வகைகளை வெளிக்கொண்டு வருவதோடு தமிழ்நாட்டின் புகழை எட்டுத்திக்கும் பரப்பும்"
சென்னை: தமிழ்நாட்டின் கலை, வரலாறு உணவு, இலக்கியம், பண்பாட்டை, எட்டுத்திக்கும் பரப்பும் வகையில் தமிழ் பண்பாட்டு கடல் வழிப் பயணங்கள் ஊக்குவிக்கப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தில் தெரிவித்து இருக்கிறார். அதேபோல் தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும் எனவும் அறிவித்து உள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொங்கி நடைபெற்று வருகிறது. இதில் 2023 - 2024 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார்.
தமிழ்நாடின் நிதிநிலை குறித்த அறிமுகத்துடன் பட்ஜெட் உரையை தொடங்கி பழனிவேல் தியாகராஜன், முதலில் தமிழ் வளர்ச்சித் துறை சார்ந்த பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.

நினைவிடம்
அவர் பேசுகையில், "தாய் தமிழை காக்க இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளான திருவாளர்கள் தாளமுத்து மற்றும் நடராசனின் ஆகியோரின் பங்களிப்பை போற்றும் வகையில் சென்னையில் நினைவிடம் ஒன்று அமைக்கப்படும்." என்று தெரிவித்து இருக்கிறார்.

அம்பேத்கர் நூல்கள் மொழி பெயர்ப்பு
தொடர்ந்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "இந்திய அரசமைப்பின் தந்தையும் முற்போக்கு இந்தியாவின் சிற்பியுமான அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளை பரப்புவதற்காக அவரது படைப்புகள் தமிழில் மொழி பெயர்க்கப்படும். இதற்காக அரசால் ரூ.5 கோடி மானியம் வழங்கப்படும்.

தமிழில் தொழில்நுட்பமும்
தொழில் நுட்பத்துறையில் தமிழ் மொழியின் பயன்பாட்டினை அதிகரிப்பதன் மூலம் தமிழ் மொழி உலக மொழியாக வளர்வதற்கு புகழ்பெற்ற வல்லுநர்களை கொண்டு தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு ஒன்று நடத்தப்படும். தமிழ் மொழியில் மென்பொருட்கள் அதிகளவில் உருவாக்கப்படுவதை இது ஊக்குவிக்கும்.

தமிழ் கடல்வழிப் பயணம்
கடல் தாண்டி கொடி நாட்டிய தமிழர் பெருமை கூறும் பண்பாட்டு விழுமியங்களை எடுத்து இயம்பும் வகையில் தமிழர் பண்பாட்டு தலங்களை இணைக்க தமிழ் பண்பாட்டு கடல் வழிப் பயணங்கள் ஊக்குவிக்கப்படும். இந்த பயணங்கள் நம் இனத்தின் செம்மையான வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு, கைவினைப் பொருட்கள், உணவு வகைகளை வெளிக்கொண்டு வருவதோடு தமிழ்நாட்டின் புகழை எட்டுத்திக்கும் பரப்பும்." என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications