பள்ளிகளில் தமிழ் பாடவேளை குறைப்பு.. 47 ஆயிரம் பேர் தேர்ச்சி பெறாத நிலையில் நடவடிக்கையால் சர்ச்சை!
சென்னை : தமிழக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தமிழ் பாடவேளைகளை குறைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
வாரத்திற்கு தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்கள் 7 பாடவேளைகள் எடுக்கப்படும் நிலையில் 6ஆக குறைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மொழிப் பாடவேளை குறைக்கப்பட்டு அதற்குப் பதிலாக நீதி போதனை, நூலக வகுப்புகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பாடவேளை குறைப்பு
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் பாடவேளை எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு 7 தமிழ், ஆங்கில பாடவேளைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் 6ஆக குறைக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல சமூக அறிவியல் பாடத்திலும் பாடவேளைகள் குறைக்கப்பட்டுள்ளன. இவற்றிற்குப் பதிலாக நீதி போதனை, நூலக வகுப்புகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சி
நடந்து முடிந்த 10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமிழ்ப் பாடத்தில் தோல்வி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பள்ளிகளில் தமிழ் மொழிப் பாட வேளை குறைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழைய நடைமுறைப்படி வாரத்திற்கு 7 பாடவேளை என்பதை உறுதி செய்ய பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ் பாடத்தில் தோல்வி
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்ப் பாடத்தில் தோல்வியடையும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு 31,625 மாணவர்களும் 2018-ம் ஆண்டு 33,707 மாணவர்களும் தமிழ்ப் பாடத்தில் தோல்வி அடைந்தனர். 2019-ஆம் ஆண்டு 36,108 பேர் தேர்ச்சி பெறவில்லை. 2020, 2021ஆம் ஆண்டில் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்ட நிலையில், 2022 பொதுத் தேர்வு முடிவுகளில் தமிழ்ப் பாடத்தில் தோல்வி அடைந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரமாக அதிகரித்தது.

சர்ச்சை
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடவேளைகளின் எண்ணிக்கை 7-ல் இருந்து 6-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் இந்த நடவடிக்கை திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications