ஸ்டாலின் தமிழில் பேசியது மோடிக்கு புரியுமா? பிரதமரிடம் மேடையிலா கோரிக்கை வைப்பது - ஜி.கே.வாசன்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவாதத்திற்கு உட்படும் வகையில் உரையாற்றியிருப்பதை தமிழக மக்கள் விரும்பவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி ரூ.31,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு விலக்கு, கச்சத்தீவு மீட்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மேடையிலேயே பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

மக்கள் விரும்பவில்லை
முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த பேச்சை விமர்சித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்றைய தினம் பாரதப் பிரதமர் அவர்கள் தமிழகத்தின் சென்னைக்கு வருகை புரிந்து திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி அர்ப்பணித்து தமிழ் மொழி , கலாச்சாரம் என சிறப்பாக உரையாற்றிய வேளையில், தமிழக முதல்வர் அவர்கள் முக்கியப் பிரச்சனைகளை கோரிக்கை மனுவாக கொடுப்பதை விடுத்து விவாதத்திற்கு உட்படும் வகையில் உரையாற்றியிருப்பதை தமிழக மக்கள் விரும்பவில்லை.

பிரதமரின் பேச்சு அருகை
நேற்றைய தினம் பாரதப் பிரதமர் அவர்கள் தமிழகத்தின் சென்னை மாநகருக்கு வருகை புரிந்து தமிழக வளர்ச்சிக்கானத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதும், நாட்டிற்கு அர்ப்பணித்ததும் தமிழக மக்கள் நலன் சார்ந்தது, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உகந்தது , நாட்டின் பொருளாதாரம் உயரவும் வழி வகுக்கும். குறிப்பாக தமிழகத்தின் பெருமை , கலாச்சாரம் , தமிழ் மக்களின் திறமை ஆகியவற்றை எடுத்துக்கூறியது சிறப்பானது.

விவாதப்பொருளாக்காமல் பிரதமர் உரை
மேலும் முக்கியமாக மருத்துவம், தொழில் நுட்ப படிப்புகளை தமிழ் வழியில் படிக்கக்கூடிய நிலையை புதிய கல்விக்கொள்கை ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார். இலங்கைத் தமிழர்களுக்கு தொடர் உதவி செய்யப்படும் என்பதையும் தெரிவித்து நம்பிக்கை ஏற்படுத்தினார். இப்படி தமிழக மக்கள், தமிழ்நாடு ஆகியவற்றிற்காக தமிழ்நாட்டிற்கு வந்து திட்டங்களுக்கான விழாவில் விவாதத்திற்கு உட்படாத வகையில் உரையாற்றியது தமிழக மக்களுக்கான நன்மை பயக்கும் தனது பயண நோக்கத்தை மிகச்சிறப்பாக நிறைவேற்றினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு ஏமாற்றமளிக்கிறது
மாறாக தமிழக முதல்வர் அவர்கள், தமிழகத்தின் முக்கியப் பிரச்சனையான பருத்தி நூல் விலை குறித்தும், தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பறிபோகும் நிலை குறித்தும் குறிப்பிடாமல், உடனடித் தேவையான பருத்தி நூல் விலைக்குறைப்பை பற்றியும் உரையாற்றாதது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. அது மட்டுமல்ல விவாதத்திற்கு உட்படும் நீட் தேர்வு மற்றும் ஜிஎஸ்டி பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அதாவது தமிழகத்தின் பிரச்சனைகளை, தேவைகளை எடுத்துக்கூறுவது கடமை என்றாலும் கூட அதை எழுத்துப்பூர்வமாக , கோரிக்கை மனுவாக கொடுத்திருக்கலாம். அதை விடுத்து முக்கியப் பிரச்சனைகளை பற்றி தமிழில் பேசியதால் உடனடியாக அது அந்த நேரத்தில் பிரதமர் அவர்களுக்கு தெரியாமல், கருத்து தெரிவிக்காத நிலை ஏற்படும்.

கச்சத்தீவு
குறிப்பாக காங்கிரஸ், தி.மு.க ஆட்சியில் கச்சத்தீவு பறிபோனது அதே கச்சத்தீவைப் பற்றி தமிழக முதல்வர் அவர்கள் பேசியதால் பா.ஜ.க அரசு கச்சத்தீவை மீட்கக்கூடிய நிலை ஏற்படும் என்பது வெளிப்படுகிறது. எனவே தமிழக முதல்வர் அவர்கள் நேற்றைய தின முக்கிய நிகழ்வான தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்ட விழாவில் விவாதப் பொருளாக்கும் வகையில் உரையாற்றியதை மக்கள் விரும்பவில்லை என்பதை த.மா.கா சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

கடிதம் கொடுத்திருக்கலாம்
மேலும் தமிழகத்திற்கு பிரதமரின் வருகையால் தமிழக மக்கள் பெரும் பயனடைவார்கள் என்ற அதே வேளையில் தமிழக முதல்வர் அவர்கள் பருத்தி நூல் விலை பற்றி உரையாற்றி, முக்கியப்பிரச்சனைகளை ஆங்கிலத்தில் பேசி, கோரிக்கை மனுவாக கொடுத்திருக்கலாம் என்பதையும் த.மா.கா சார்பில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்." எனக் குறிப்பிட்டு உள்ளார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications