தமிழகத்தில் சரசரவென இறங்கிய கொரோனா.. இன்று 1,797 பேருக்கு பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 1,797 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 1,908 பேர் ஒரே நாளில் மீண்டனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் மெதுவாக குறைந்து வருகிறது. குணம் அடைபவர்களின் எண்ணிக்கை பாதிப்பவரகளின் எண்ணிக்கைவிட அதிகமாகி உள்ளது. அதாவது பாதிப்பு முன்பைவிட ஓரளவு குறைந்துள்ளது.

தமிழகத்தில் ஆகஸ்ட் 18ம் தேதி நிலவரப்படி கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1,797 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவரகளின் எண்ணிக்கை 25,94,233 ஆக உயர்ந்துள்ளது.

தேறியவர்கள்

தேறியவர்கள்

அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 1,908 பேர் ஒரே நாளில் மீண்டனர். இதனால் ஒட்டுமொத்தமாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 25,39,540 ஆக உயர்ந்துள்ளது.

கொரேனா உயிரிழப்பு

கொரேனா உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஒரே நாளில் 31 பேர் மரணம் அடைந்துள்ளனர்.இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 34,610 ஆக உயர்ந்துள்ளது.

நேயாளிகள் அதிகரிப்பு

நேயாளிகள் அதிகரிப்பு

தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது தமிழகத்தில் நேற்று 20,225 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த எண்ணிக்கை 20,083 ஆக உயர்ந்துள்ளது.

சிசிச்சை எவ்வளவு

சிசிச்சை எவ்வளவு

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 210 பேரும், சென்னையில் 198 பேரும், ஈரோட்டில் 156 பேரும், சேலத்தில் 103 பேரும், செங்கல்பட்டில் 108 பேரும், தஞ்சாவூரில் 109 பேரும், திருப்பூரில் 89 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு பெரிய அளவில் இல்லை. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கோவையில் மட்டும் அதிகமாக 2355 பேர் உள்ளனர். சென்னையில் இந்த எண்ணிக்கை 2061 ஆகவும், ஈரோட்டில் 1841 ஆகவும். செங்கல்பட்டில் 1119 ஆகவும், தஞசாவூரில் 1104 ஆகவும் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+