தமிழகத்தில் மீண்டும் உயரத்தொடங்கும் ஆக்டிவ் கேஸ்கள்.. அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 1,933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 1,887 பேர் ஒரே நாளில் மீண்டனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் மெதுவாக உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் ஆகஸ்ட் 13ம் தேதி நிலவரப்படி கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1,933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவரகளின் எண்ணிக்கை 25,84,969 ஆக உயர்ந்துள்ளது.

எவ்வளவு
அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 1,887 பேர் ஒரே நாளில் மீண்டனர். இதனால் ஒட்டுமொத்தமாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 25,30,096 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பு எவ்வளவு
தமிழகத்தில் கொரோனா காரணமாக ஒரே நாளில் 34 பேர் மரணம் அடைந்துள்ளனர்.இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 34,462 ஆக உயர்ந்துள்ளது.

சரிந்தது
தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிரடியாக 20,411 . தமிழகத்தில் நேற்று 20,399 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த எண்ணிக்கை 20,41ஆக சரிந்துள்ளது
Recommended Video

எவ்வளவு
தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 236 பேரும். சென்னையில் 211 பேரும், ஈரோட்டில் 177 பேரும், சேலத்தில் 120 பேரும், செங்கல்பட்டில் 102 பேரும், தஞ்சாவூரில் 114 பேரும், திருப்பூரில் 104 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் கோவையில் மட்டும் அதிகமாக 2358 பேர் உள்ளனர். சென்னையில் இந்த எண்ணிக்கை 2098 ஆகவும், ஈரோட்டில் 1745 ஆகவும் உள்ளது.












Click it and Unblock the Notifications