Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

TN 10th Result: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. 93.80% தேர்ச்சி.. எப்படி பார்ப்பது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: (10th public exam Result 2025) தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,113 மையங்களில் சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இதேபோல் 11ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடத்தப்பட்டது.10ம் வகுப்பு தேர்வு முடிகள் மற்றும் 11ம் வகுப்பு தேர்வுகள் இன்று வெளியாகி உள்ளது. தேர்வு முடிவுகளை மாணவ மாணவிகள் உடனடியாக எப்படி அறிவது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடந்து முடிந்தது. அதன் பின்னர் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 28-ல் தொடங்கியது. இந்த 10ம் வகுப்பு தேர்வை தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,113 மையங்களில் சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 15ம் தேதி முடிந்தது. அதன் பின்னர் பொதுத்தேர்வு முடிந்ததும் மாணவர்களின் விடைத்தாள்கள் 118 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

tamil nadu 10th results 2025 10th grade public examination results to be released today

அங்கிருந்து திருத்துதல் மையங்களுக்கு ஏப்ரல் 17-ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து ஏப்ரல் 21 முதல் 30-ம் தேதி வரை விடைத்தாள் திருத்துதல் பணிகள் நடைபெற்றன. தற்போது மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக தேர்வு அட்டவணை வெளியிட்டபோது, மே மாதம் 19-ந்தேதி (திங்கட்கிழமை) 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறையால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு முடிவு மே 9-ந்தேதி வெளியாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஒரு நாள் முன்கூட்டியே அதாவது மே 8-ந்தேதியே வெளியிடப்பட்டிருந்ததால், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் முன்கூட்டியே வெளியாகலாம் என எதிர்பார்ப்பு மாணவர்களிடையே எழுந்தது.

இந்த நிலையில் தேர்வு முடிவை வெளியிடுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன், அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகள் கடந்த புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். அதன்படியே முன்கூட்டியே தேர்வு முடிவை வெளியிடுவது பற்றி முடிவெடுக்கப்பட்டது. அதன்படி மே 16ம் தேதியான இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 16ம் தேதியான இன்று பிற்பகலில் வெளியிடப்படும் என்றும் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். அதன்படியே 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவுகளை இன்று காலை வெளியிட்டார்.

10ம் வகுப்பு தேர்வு முடிவை பார்ப்பது எப்படி

மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை www.tnresults.nic.in, dge.tn.gov.in, மற்றும் dge1.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ தளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி கொண்டு பார்க்கலாம். இணையதளங்களுடன் சேர்த்து, https://results.digilocker.gov.in மற்றும் SMS சேவையின் மூலமும் மதிப்பெண்கள் பெற முடியும்.

93.80 சதவீதம் தேர்ச்சி

மார்ச் மாதம் 28-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி வரை நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித் தேர்வர்கள், 272 சிறை கைதிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதியிருந்தார்கள். இதில் 8,17,261 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி தேர்ச்சி விகிதம் - 93.80 சதவீதம் ஆகும். 10ம் வகுப்பில் மாணவியர் 4,17,183 (95.88 சதவீதம்) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 4,00.078 (91.74 சதவீதம்) தேர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு மாணவியர் தேர்ச்சி விகிதம் 4.14 சதவீதம் அதிகரித்துள்ளது. தேர்விற்கு வருகைபுரியாதவர்கள்: 15,652பேர் ஆகும். 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 98.31 சதவீதம் தேர்ச்சியுடன் சிவகங்கை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

tamil nadu 10th results 2025 10th grade public examination results to be released today
tamil nadu 10th results 2025 10th grade public examination results to be released today
tamil nadu 10th results 2025 10th grade public examination results to be released today
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+