தமிழகத்தில் 3வது நாளாக இன்றும் உயர்ந்தது கொரோனா பாதிப்பு.. எச்சரிக்கை தரும் நிலவரம்
சென்னை : தமிழகத்தில் கடந்த செப்டம்ர் 3ம் தேதி 1568 ஆக இருந்த பாதிப்பு. செப்டம்பர் 4 ம் தேதி 1575 ஆகவும் இன்று 1592 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 1607 பேர் ஒரே நாளில் மீண்டனர். பாதிக்கப்பட்டவர்களை விட மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அந்த எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருவது கவலைக்குரியதாகும்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மே இரண்டாவது வாரத்தில் 36 ஆயிரம் என்கிற அளவில் தினசரி பாதிப்பு இருந்தது. ஆனால் தற்போது 1600 என்கிற நிலையில் உள்ளது. எல்லா மாவட்டங்களிலுமே பாதிப்பு குறைந்துள்ளது என்றாலும், கோவை, ஈரோடு, சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூர் மாவட்டங்களில் பாதிப்பு பெரிய அளவில் மாறவில்லை. எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
தமிழகத்தில் இனறைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் செப்டம்பர் 4ம் தேதியான இன்று கொரோனா தொற்றால் 1592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவரகளின் எண்ணிக்கை 26,22,678 ஆக உயர்ந்துள்ளது.

எவ்வளவு
அதேநேரம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,607பேர் ஒரே நாளில் மீண்டனர். இதனால் ஒட்டுமொத்தமாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 25,71,378 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பு எவ்வளவு
தமிழகத்தில் கொரோனா காரணமாக செப்டம்பர் 5ம் தேதி மாலை நிலவரப்படி 18 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 35,018 ஆக உயர்ந்துள்ளது.

சரிந்தது
தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிரடியாக குறைந்து 16 ஆயிரத்திற்கு சரிந்துள்ளது . தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணக்கை 16,315ல் இருந்து 16,282 ஆக சரிந்தது. கொரோனா பாதிப்பு சிறிய அளவில் உயர்ந்து வருவதால் ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை உயராத வரை பிரச்சனை பெரிய அளவில் இல்லை என்றே நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். எனினும் சில நாட்களில் இந்தநிலை மாறலாம் என்ற அச்சமும் உள்ளது.

எவ்வளவு
தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 229 பேரும், சென்னையில் 165 பேரும், ஈரோட்டில் 104 பேரும், திருவள்ளூரில் 84 பேரும், தஞ்சாவூரில் 70 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை மிகக்குறைவாகவே உள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் கோவையில் மட்டும் அதிகமாக 2211 பேர் உள்ளனர். அதை தொடர்ந்து சென்னை, ஈரோடு, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications