பிளஸ் 2, பிளஸ் 1 செய்முறை தேர்வு தேதி வெளியீடு.. மாணவர்களே நோட் பண்ணுங்க
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்ரவரி மாதத்திலேயே செய்முறை தேர்வு நடத்தி முடிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு என்பது நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அரையாண்டு தேர்வுகள் முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் 11, 12ம் மாணவ-மாணவிகளுக்கான செய்முறை தேர்வு தேதி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு தேர்வுகள் துறை இயக்குனரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் உள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு பிப்ரவரி 7 ம் தேதி முதல் பிப்ரவரி 14ம் தேதிக்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். அதன்பிறகு பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கான செய்முறை தேர்வுகளை பிப்ரவரி 15 ம் தேதி முதல் பிப்ரவரி 21ம் தேதி வரை நடத்தி முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக 10ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 22ம் தேதி முதல் பிப்ரவரி 28 ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த ஆண்டு அறிவித்தார். அதேபோல் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு இருந்தது.
அதன்படி மார்ச் மாதம் 3-ந்தேதி முதல் மார்ச் மாதம் 25-ந்தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறுகிறது. மார்ச் 5ம் தேதி முதல் மார்ச் 27-ந்தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வு நடக்கிறது. அதன்பிறகு மார்ச் 28ம் தேதி முதல் ஏப்ரல் 15ம்தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்பிறகு மே 9 ம் தேதி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், மே 19ம் தேதி 10 மற்றும் பிளஸ் 1 மாணவ-மாணவிகளுக்கான தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications