தமிழகத்தில் இன்று 26,513 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 490 பேர் மரணம்! ஷாக் தந்த திண்டுக்கல், கடலூர்!
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 26,513 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை இரண்டு அலைகளிலும் சேர்த்து 21,23,029 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 18,02,176பேர் மீண்டுள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 2,96,131 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 26,513 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,23,029 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 31,673 பேர் மீண்டனர். இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 18,02,176 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்புடன் 2,96,131 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

எங்கு எவ்வளவு மரணம்
தமிழகத்தில் கொரோனா தொற்றால் 490 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 24,722 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக இன்று கொரோனாவால் சென்னையில் 58 பேர் மரணம் அடைந்துள்ளனர். செங்கல்பட்டில் 50 பேரும், கோவையில் 32பேரும், திருவள்ளூரில் 26 பேரும், திண்டுக்கல் மற்றும் கடலூரில் தலா 20 பேரும் உயிரிழந்தனர்.

RT-PCR சோதனை
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக சோதனைகளையும் தடுப்பூசி கொடுப்பதையும் தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,56,839 பேருக்கு RT-PCR பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் RT-PCR பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,72,04,120 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் 1,67,397 பரிசோதனைகள் இன்று மட்டும் நடத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை தமிழகத்தில் 2,78,42,512 RT-PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

கோவை முதலிடம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருப்பூர், ஈரோடு, திருவள்ளூர், சேலம், கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திண்டுக்கல், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமாக உள்ளது தமிழகத்திலேயே அதிகபட்சமாக இன்று கோவையில் 3332 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றால் இன்று 2467 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக ஈரோட்டில் 16534 பேரும், ஈரோடுக்கு அடுத்தபடியாக திருப்பூரில் 1496 பேருக்கும், சேலத்தில் 1338 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிக நோயாளிகள் எங்கு
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தமிழகத்திலேயே சென்னையை முந்தி கோவை முதலிடத்தில் உள்ளது. கோவையில் தற்போது 40570 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். ஆனால் சென்னையில் அதைவிட குறைவாக 32069 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். கோவை சென்னைக்கு அடுத்தபடியாக திருப்பூர், மதுரை, ஈரோடு, செங்கல்பட்டு, திருச்சி மாவட்டங்களில் ஏராளமானோர் சிகிச்சை பெறுகிறார்கள்.
-
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications