சென்னையில் அதிகரிக்கும் உயிரிழப்பு.. கோவையிலும் தான்.. இன்றைய கொரோனா அப்டேட்!
சென்னை : தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 4,506 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் கொரோனாவால் 118 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் இன்று 15 பேர் பலியாகி உள்ளனர். கோவையில் 12 பேர் ஒரே நாளில் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் தமிழகத்தில் 32,619 பேர் பலியாகி உள்ளனர்.
கொரோனாவின் இரண்டாவது அலை குறைந்த வருகிறது தொற்று பாதிப்பு. கடந்த மே மாதம் இரண்டாவது வாரத்தில் 36 ஆயிரம் என்கிற அளவில் இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது 4500 என்கிற அளவிற்கு சரிந்துள்ளது. பாதிப்பு சரிந்த அளவிற்கு உயிரிழப்பு பெரிதாக சரியவில்லை.
சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 4,506 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 24,79,696 ஆக உயர்ந்துள்ளது.

மொத்த பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 5,537 பேர் மீண்டுள்ளனர். இதனால் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 24,08,886 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 38,191 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கோவையில் 12 பேர் பலி
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 113 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகுத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32,619 ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 15 பேர் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கோவையில் 12 பேரும், சேலத்தில் 9 பேரும், திருப்பூரில் 7 பேரும். திருச்சியில் 8 பேரும் பலியாகி உள்ளனர்.

ஈரோட்டிலும் உயர்வு
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக கோவையில் 514 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரோட்டில் 420 பேருக்கும், சேலத்தில் 295 பேருக்கும், திருப்பூரில் 270 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் 205 பேருக்கும், சென்னையில் 257 பேருக்கும், செங்கல்பட்டில் 207 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை முதலிடம்
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புடன் 38,191 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். அதிகபட்சமாக கோவையில் 4236 பேரும், ஈரோட்டில் 4093 பேரும், சென்னையில் 3121 பேரும், சேலத்தில் 1841 பேரும், செங்கல்பட்டில் 2041 பேரும், தஞ்சாவூரில் 1961 பேரும், திருப்பூரில் 1664 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications