தமிழகத்தில் 2 மாதத்திற்கு பிறகு நல்ல மாற்றம்... இன்றைய கொரோனா நிலவரம்
சென்னை : தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 4804 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் கொரோனாவால் 98 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 6553 பேர் மீண்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வெகுவாக குறைந்துவிட்டது. கடந்த மே மாதம் இரண்டாவது வாரத்தில் 36 ஆயிரம் என்கிற அளவில் இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது 5 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 4804 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 24,70,678 ஆக உயர்ந்துள்ளது.

மொத்த பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 6553 பேர் மீண்டுள்ளனர். இதனால் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 23,97,336 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 40,954 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மதுரையில் 9 பேர் பலி
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 98 பேர் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக மதுரையில் 9 பேர் பலியாகி உள்ளனர். கோவையில் 7 பேரும், ராணிப்பேட்டை, சேலம், கடலூர், திருவள்ளூரில் தலா 6 பேர் ஒரே நாளில் பலியாகி உள்ளனர். சென்னையில் 4 பேர் பலியாகி உள்ளனர்.

ஈரோட்டிலும் அதிகம்
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக கோவையில் 597 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரோட்டில் 506 பேரும், சேலத்தில் 318 பேரும், திருப்பூரில் 294 பேரும், சென்னையில் 291 பேரும், தஞ்சாவூரில் 231 பேரும், செங்கல்பட்டில் 238 பேரும், திருச்சியில் 185 பேரும், நாமக்கல்லில் 184 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை முதலிடம்
தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்புடன் 40,954 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். அதிகபட்சமாக கோவையில் 5110 பேரும், ஈரோட்டில் 4223 பேரும், சென்னையில் 3462 பேரும், சேலத்தில் 2230 பேரும், செங்கல்பட்டில் 2313 பேரும், தஞ்சாவூரில் 2045 பேரும், திருப்பூரில் 1839 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
-
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications