அனல் காற்று வீசுதே...சன்டேயில் சூரியனுக்கு வந்த கோபம்..7 மாவட்டங்களில் சதமடித்த வெயில்!
சென்னை: தமிழ்நாட்டில் பல ஊர்களில் நேற்றைய தினம் வெயில் சுட்டெரித்தது. 7 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையான நேற்றைய தினம் சூரியனின் கோபப்பார்வையால் பல ஊர்களில் அனல் பறந்தது.
அக்னி நட்சத்திர காலத்தில்தான் அனல் காற்று வீசும். ஏப்ரல் மாதத்திலேய அக்னியின் தாக்கம் ஆரம்பித்து விட்டது போல உணர முடிகிறது. வெப்பக்காற்றின் வேகத்தை நேற்றைய தினம் பல மாவட்டங்களில் உணர்ந்தனர். விடுமுறை தினமான நேற்று கோடை வெப்பத்தில் வேகத்தை தாங்க முடியாமல் வீடுகளுக்குள் முடங்கினர்.

நேற்றைய தினம் அதிகபட்சமாக ஈரோட்டில் 101.1 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது, கரூர் பரமத்தியில் 100.4 டிகிரி பாரன்ஹீட்டும் பதிவாகியுள்ளது. அதே போல வேலூர், திருப்பத்தூர், சேலம், தருமபுரி, கோவை மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை நெருங்கியது.குறைந்தபட்சமாக கொடைக்கானலில் 63 டிகிரியும், குன்னூரில் 73 டிகிரியும் பாரன்ஹீட் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதே நேரத்தில் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் பல பகுதிகளில் பூமி குளிர மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று வடக்கு மற்றும் தென் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் 13ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது.சென்னையில், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவிலும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 5 நாட்களுக்கு இந்தியாவில் வெப்ப அலை தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்க உள்ளது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயரும் வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மே 4ஆம் தேதி அக்னி நட்சத்திர காலம் ஆரம்பமாகிறது. வெப்ப அலை வீசக்கூடும் என்று என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications