தமிழ்நாட்டில் நேற்று 812 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. ஒரே நாளில் 8 பேர் மரணம்
சென்னை : தமிழகத்தில் நவம்பர் 12 ம் தேதி மாலை நிலவரப்படி ஒரே நாளில் 812 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 927 பேர் ஒரே நாளில் மீண்டனர். கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்று 10,013
ஆக இருந்த நிலையில் நேற்று அந்த எண்ணிக்கை 9,890 ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மே இரண்டாவது வாரத்தில் 36 ஆயிரம் என்கிற அளவில் தினசரி பாதிப்பு இருந்தது. ஆனால் தற்போது 800 என்கிற நிலையில் உள்ளது. கோவை, ஈரோடு, சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூர் உள்பட எல்லா மாவட்டங்களிலும் பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது.
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் நவம்பர் 12 தேதியான நேற்று கொரோனா தொற்றால் 812 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவரகளின் எண்ணிக்கை 27,13,216 ஆக உயர்ந்துள்ளது.

எவ்வளவு
அதேநேரம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 927 பேர் ஒரே நாளில் மீண்டனர். இதனால் ஒட்டுமொத்தமாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 26,67,067 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பு எவ்வளவு
தமிழகத்தில் கொரோனா காரணமாக நவம்பர் 12 தேதி மாலை நிலவரப்படி ஒரு நாளில் 8 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 36,259 ஆக உயர்ந்துள்ளது.

சரிந்தது
தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்து உள்ளது . தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்று 10,013 ஆக இருந்த நிலையில் நேற்று அந்த எண்ணிக்கை 9,890 ஆக குறைந்துள்ளது.

கோவையில் பாதிப்பு
தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 114 பேரும், கோவையில் 108 பேரும், செங்கல்பட்டில் 59 பேரும், ஈரோட்டில் 71 பேரும், திருப்பூரில் 52 பேரும், சேலத்தில் 44 பேரும், தஞ்சாவூரில் 27 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை சென்னையில் 1205 ஆகவும், கோவையில் 1134 ஆகவும் உள்ளது.












Click it and Unblock the Notifications