தமிழக அரசு முக்கிய அறிவிப்பு.. மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை, 7 மாவட்டங்களில் 5ம் வகுப்பு வரை லீவு
சென்னை : கொரோனா முன்னெச்சரிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகள் மற்றும் குமரி, நெல்லை, கோவை, திருப்பூர், தேனி, நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் எல்கேஜி முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இன்று மாலை நிலவரப்படி 81 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளர். அதிகபட்சமாக கேரளாவில் 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதன் காரணமாக அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்கு அனைத்து மால்களும், தியேட்டர்களும் மூட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை என்றாலும் அண்டை மாநிலங்களில் கொரானா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் மழலையர் பள்ளிகளுக்கும் நாளை முதல் மார்ச் 31 வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
இதேபோல் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட கேரளாவை ஒட்டியுள்ள 7 மாவட்டங்களில் 5ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கம் மார்ச் 16 முதல் மார்ச் 31 வரை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு.. இன்றே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க ஏற்பாடு! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications