அன்புக் கரங்கள் மூலம் அள்ளித் தரும் தமிழக அரசு! மாணவர்களுக்கு மாதம் ரூ.2000! விண்ணப்பிப்பது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசின் சார்பில் பெற்றோர்களின் இருவர் அல்லது ஒருவரை இழந்து மற்றொருவரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு தாயுமானவர் திட்டத்தின் கீழ் மாதம் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தத் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது? தேவையான ஆவணங்கள் தகுதிகள் என்னென்ன? என்பது குறித்து பார்க்கலாம்..

தமிழ்நாடு அரசின் சார்பில் ஏழை எளிய மக்களின் கல்விக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் மாணவ மாணவிகளுக்கு மாதம் தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் அன்பு கரங்கள் திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இந்த திட்டத்தை துவக்கி வைத்தார்.

Tamil Nadu Anbu Karangal Scheme

அன்பு கரங்கள் திட்டம்

இந்த திட்டத்தின் மூலம் பெற்றோர் இருவரையும் இழந்த அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு மாதம் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 18 வயது வரை பள்ளி படிப்பு முடியும் வரை, இடைநிற்றல் இல்லாமல் கல்வியை தொடர்வதற்காகவும், பின்னர் பள்ளி படிப்பு முடிந்தவுடன் கல்லூரி கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கு வழிவகை செய்யும் வகையில் இந்த திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ரூ2000 உதவித்தொகை

அது மட்டுமல்லாமல் பெற்றோரை இழந்து 12-ம் வகுப்பு முடித்து பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டுள்ள மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகளும் வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே இந்த திட்டத்தில் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில் புதிதாக விண்ணப்பிக்கலாம் எனவும் அதற்கான தகுதி மற்றும் விதிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தில் 2000 ரூபாய் கல்வி உதவித்தொகை பெற தனியாக விண்ணப்ப படிவம் எதுவுமே இல்லை. ஐந்து ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டிய கருணை மனுவை உரிய சான்றிதழ்களுடன் மாவட்ட ஆட்சியர் அல்லது குழந்தைகள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை

மனு அளித்தபின்னர் சில நாளில் வீட்டிற்க்கு மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடமிருந்து மனு ஏற்பு கடிதம் வந்த பின்னர் தான் உதவித்தொகை பெற மாவட்ட முன்னுரிமை வரிசைக்கு வைத்திருப்பார்கள். எனவே, இந்த கடிதம் மனு கொடுத்த 30 தினங்களுக்குள் வரவில்லை என்றால் மீண்டும் குழந்தைகள் நல அலுவலகத்தை அணுகி மனு நிலைமை என்ன, ஏன் எனக்கு கடிதம் வரவில்லை என குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரில் சென்று மனு கொடுத்த பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். இதை செய்து கடிதம் வந்தால் தான் உதவித்தொகை கிடைப்பது உறுதி. இல்லையெனில் உதவித்தொகை கிடைக்க வாய்ப்பில்லை (கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு இது பொருந்தாது)

தேவையான ஆவணங்கள்:

பெற்றோர் ஆவணங்கள்:

1.தந்தை (or) தாய் இறப்புச் சான்றிதழ்

2.ஆதார் அட்டை

3.ரேஷன் கார்டு

4.கண்டிப்பாக கிராமத்தில் வசிப்பவர்களுக்கு வருமானவரிச் சான்று குறிப்பாக 40000 முதல் 70000 க்குள் இருக்குமாறு பெறப்பட வேண்டும். நகரங்களில் வசிப்பவர்களுக்கு 72000 முதல் 96000க்குள் இருக்க வேண்டும்.(சான்று ஒரு வருடத்திற்குள் பெறப்பட்டதாக இருக்க வேண்டும்.)

5.ஜாதி சான்றிதழ்

6.வாக்காளர் அட்டை பெற்றோர் குழந்தைகள் இருப்பவர்களுக்கு இணைக்க வேண்டும்.

7.வாரிசு சான்று

8.விதவை சான்று

9 இருப்பிட சான்று அல்லது பிறப்பிட சான்று

குழந்தைகள் ஆவணம்:

1.ஆதார் கார்டு

2.பள்ளியில் படித்துக் கொண்டிருப்பதற்கான சான்று

3.மாணவர் பிறப்பு சான்றிதழ்" ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+