தமிழ்நாடு, கேரளாதான் அடுத்த டார்கெட்.. பிரிக்கவா பார்க்குறீங்க? பகிரங்கமாக பிளானை சொன்ன அமித் ஷா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மற்றும் கேரளாவில் கடந்த தேர்தலை விட அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டு உள்ளார்.

லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக 28 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தக் கூட்டணியின் 3-வது கூட்டம் நேற்று மற்றும் இன்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஸ்டாலினும் கலந்து கொள்ள உள்ளார். இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்து 3வது முறையாக மத்தியில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.

Tamil Nadu and Kerala is the next target for the BJP says Amit Shah in Lok Sabha elections 2024

இந்த தேர்தலுக்காக பல்வேறு அதிரடி அறிவிப்புகளை பாஜக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் சமீபத்தில் 5 மாநில தேர்தல்களில் வென்ற பின் பாஜக உற்சாகமாக இருக்கிறது.

பாஜக வெற்றி: நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தானில் பாஜக வென்றுள்ளது. அதே சமயம் தெலுங்கானாவிலும், மிசோராமிலும் பாஜக தோல்வி அடைந்துள்ளது. இதில் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. மத்திய பிரதேசத்தில்., பாஜக 163 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மெஜாரிட்டி பெற 116 இடங்கள் போதும். அங்கே சாதாரண வெற்றி இல்லாமல் மாபெரும் இமாலய வெற்றியை பாஜக பதிவு செய்து உள்ளது. இந்தியா கூட்டணி இல்லாமல் காங்கிரஸ் களமிறங்கியது அங்கே பாஜகவிற்கு சாதகமாக மாறியுள்ளது.

மேலும் சட்டசபை தேர்தலில் சத்தீஸ்கரில் பாஜக அபார வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளில் 54 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. சத்தீஸ்கரில் ஆட்சி அமைக்க 46 உறுப்பினர்கள் இருந்தால் போதுமானது. இதன் மூலம் அரிதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது பாஜக. காங்கிரஸ் கட்சி 35 இடங்களில் மட்டும் வென்றது. கடந்த 2018 தேர்தலோடு ஒப்பிடுகையில் கையில் இருந்த 33 இடங்களை காங்கிரஸ் இழந்துள்ளது. ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் நடந்த 199 தொகுதிகளில் பாஜக 115 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான தகுதியைப் பெற்றது.

தென்னிந்தியாவில் காங்கிரஸ் வெற்றி: கர்நாடகாவை தொடர்ந்து தென்னிந்தியாவின் மற்றொரு மாநிலமான தெலங்கானாவிலும் காங்கிரஸ் காலூன்றியிருப்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தெலுங்கானாவின் 119 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 30-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தெலுங்கானாவில் பெரும்பான்மைக்கு தேவை 61 இடங்கள்.

தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான சிபிஐ 1 இடத்தில் வென்றது. ஆட்சியில் இருந்த பிஆர்எஸ் கட்சி 39 இடங்களில்தான் வென்றது. இதனால் ஆட்சியை காங்கிரஸிடம் பிஆர்எஸ் கட்சி பறிகொடுத்தது. இதனால் தென்னிந்தியாவில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் பாஜகவிற்கு ஏற்பட்டு உள்ளது.

தென்னிந்தியா எம்பிக்கள்: தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கேரளாவில் பாஜகவிற்கு எம்பிக்கள் இல்லை. புதுச்சேரியில் அங்கே ஆட்சி கூட்டணியில் உள்ளது. கர்நாடகாவில் வலுவாக இருந்தாலும் ஆட்சியில் இல்லை. தெலுங்கானா தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.

இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவின் பிளான் என்ன என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். வடக்கு தெற்கு என எதிர்க்கட்சிகள் நாட்டை பிளவுபடுத்துகின்றன. அது நடக்காது. தென்னிந்தியாவில் பாஜக கால் வைக்கும். அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மற்றும் கேரளாவில் கடந்த தேர்தலை விட அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டு உள்ளார்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+