தூய சக்தி ஆட்சியில் தலைவிரித்தாடும் லஞ்சம்..ஒரே நாளில் சிக்கிய 1.74 கோடி! கை நீட்டாமல் புது டெக்னிக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நேற்று பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் 36 இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசால் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத 13 லட்சம் ரொக்க பணமும், ஜிபே வாயிலாக பரிமாற்றம் செய்யப்பட்ட 1 கோடியே 59 லட்சம் என மொத்தம் ஒரு கோடியே 73 லட்சத்து 48 ஆயிரத்து 666 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

"மக்கள் பணத்தை தொட மாட்டேன்.. தொடவும் விடமாட்டேன். தொட்டவர்களையும் விடமாட்டேன்" என கரூரில் விஜய் ஆர்ப்பரித்து பேசியது தமிழக முழுவதும் ட்ரெண்டானது. யாராவது லஞ்சம் கேட்டால்.. இது எங்க அண்ணன் ஆட்சி.. எங்க விஜய் ஆட்சி.. என சொல்லுங்கள் என பேசி இருந்தார் விஜய்.

Raid DVAC Anti Corruption

முன்னதாக ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே லஞ்சம் ஊழலை ஒழிப்பேன் என கூறி இருந்தார் விஜய். ஆட்சிக்கு வந்த பிறகு பத்திரப்பதிவு, சிஎம்டிஏ, வருவாய் துறை அலுவலகங்களில் லஞ்சம் இல்லாத நிலை இருப்பதாக பரப்பப்படுகிறது.

அதிகாரிகள் லஞ்சம் கேட்டாலும் பொதுமக்கள் தாமாக முன்வந்து புகார் அளிக்கின்றனர் என்றும் சமூக வலைதளங்களில் கூறுகின்றனர். ஆனால் உண்மை அப்படி அல்ல. பணமாக வாங்காமல் யுபிஐ மூலம் டிஜிட்டல் பேமென்ட் பெற்று வருகின்றனர் அதிகாரிகள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. தற்போது அதையே அவர்களுக்கு எதிரான ஆயுதமாக லஞ்ச ஒழிப்புத்துறை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக முழுவதும் கடந்த சில வாரங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பத்திரப்பதிவு, கனிமவளத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அந்த சோதனைகளை கணக்கில் வராத ரொக்க பணம் கைப்பற்றப்படுவது வெகுவாக குறைந்திருக்கிறது. யுபிஐ மூலம் லஞ்சப் பரிவர்த்தனை நடைபெறுவது தான் அதற்கு காரணம் என்ன சொல்லப்படுகிறது. இந்நிலையில் அதனை உறுதி செய்துள்ளது லஞ்ச ஒழிப்புத் துறை.

நேற்று அதிரடியாக நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சொந்தமான அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். ஏற்கனவே ஆர்டிஓ அலுவலகங்கள், ரெஜிஸ்டர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய நிலையில், அடுத்த டார்கெட்டாக நகராட்சி நிர்வாகம் அலுவலகங்கள் இருந்தது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி, சிவகங்கை மாவட்டம் மாநகராட்சி, திண்டுக்கல் சின்னாளபட்டி என பல்வேறு இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது.

அதில் மானாமதுரை நகராட்சியில் பணிகளுக்கான தொகையை விடுவிக்க நகராட்சி பொறியாளர், ஒப்பந்ததாரர் பட்டுராஜனிடம் 2 லட்சம் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக சிக்கினார். இதே போல திருப்பூர் மாவட்டம் அவிநாசி நகராட்சியில் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் கிட்டத்தட்ட 6 லட்சம் ரூபாய்க்கு கணக்கு காட்டப்படாதால் 11 ஆவணங்கள் சிக்கி உள்ளதோடு வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று நடந்த சோதனையில் சிக்கிய பணம் மற்றும் பண பரிவர்த்தனை குறித்து அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 36 இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் கணக்கில் வராத 13 லட்சம் ரூபாய் ரொக்க பணம் சிக்கி இருக்கிறது. இது மட்டுமல்லாமல் ஜி-பே வாயிலாக பரிமாற்றம் செய்யப்பட்டதாக ஒரு கோடியே 59 லட்சம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 1 கோடியே 73 லட்சத்து 48 ஆயிரத்து 666 ரூபாய் சிக்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் நூற்றுக்கணக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருக்கும் நிலையில் ஏராளமான அதிகாரிகள், பொறியாளர்கள், உதவியாளர்கள் சிக்கி உள்ளதாகவும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் சொல்லுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+