Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாதியில் உரையை நிறுத்திய ஆளுநர் ரவி.. உடனே கண்ட்ரோல் எடுத்த சபாநாயகர் அப்பாவு.. சட்டசபையில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநர் ரவி தனி முழு பட்ஜெட் உரையை வாசிக்காமல் இன்று பாதி உரையில் நிறைவு செய்தார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு இன்று பட்ஜெட் உரையை நிகழ்த்தினார்.

நடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இந்த மாதம் நடக்க உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக இன்று சட்டசபை ஆளுநர் ரவி உரையுடன் தொடங்கியது.

Tamil Nadu Assembly budget : Speaker Appavu took over the house as Governor RN Ravis did not complete his speech

ஆளுநர் ரவி தனது உரையில் தொடக்கத்தில் திருக்குறளை வாசித்தார். அதன்பின் பட்ஜெட் கூட்ட தொடரின் அறிமுகத்தை வாசித்தார். அதன்பின் உரையை பாதியில் நிறைவு செய்தார். 2 நிமிடங்கள் மட்டுமே மொத்தமாக பட்ஜெட் கூட்டத்தில் ஆர். என் ரவி உரை நிகழ்த்தினார்.

சட்டப்பேரவை தொடங்கியதும் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு வைத்தார். சட்டசபை நிகழ்விற்கு முன் மற்றும் பின் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதை ஏற்கவில்லை. உரையில் இருக்கும் சில கருத்துக்களுடன் முரண்படுகிறேன். அதனால் உரையை முடிக்கிறேன் என்று கூறி 2 நிமிடத்தில் உரையை நிறைவு செய்தார்.

ஆளுநர்கள் தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை மட்டுமே பேச வேண்டும் என்பதுதான் சட்டம். இதுதான் சட்டசபை விதி. ஆனால் இன்று முழு உரையை படிக்காமல் ஆளுநர் புறக்கணிப்பு செய்துள்ளார்.

கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஆளுநர் உரை முழுமையாக படிக்காமல் புறக்கணிப்பு செய்துள்ளார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு முழு உரையை படித்து வருகிறார்.

கடந்த ஆண்டு: கடந்த ஆண்டும் இதேபோல் ஆளுநர் ரவி.. தனது உரையை சரியாக வாசிக்கவில்லை. கடந்த ஆண்டு ஆளுநர் ஆர். என் ரவி தமிழ்நாடு சட்டசபையில் ஆற்றிய உரை பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல், ஆளுநர் ஆர். என் ரவி அதில் சில பத்திகளை நீக்கியும், சில வரிகளை தாமாக சேர்த்தும் பேசினார்.

கடந்த ஆண்டு ஆளுநர் ரவி தனது உரையில் 65வது பத்தியை அப்படியே தவிர்த்து இருக்கிறார். அந்த பத்தியில், சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி, பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகின்றது, என்ற பகுதியை மொத்தமாக தவிர்த்து உள்ளார்.

அதோடு தமிழ்நாடு அரசின் கீழ் சட்ட ஒழுங்கு சரியாக இருக்கிறது. தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கிறது என்ற வாசகத்தையும் ஆளுநர் ஆர். என் ரவி பயன்படுத்தாமல் தவிர்த்தார். இதெல்லாம் போக தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிகிறது. தமிழ்நாடு முதலீடுகளில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது என்று முதலீடுகள் தொடர்பான வார்த்தைகளையும் ஏனோ ஆளுநர் ஆர். என் ரவி அப்படியே தவிர்த்து இருக்கிறார். ஆளுநரின் இந்த செயல் கடுமையான விமர்சனங்களை சந்தித்து உள்ளது.

ஆளுநர் ஆர். என் ரவி கடந்த சட்டசபையில் பேச தவறிய வார்த்தைகளை அவருக்கு முன்பாகவே சபாநாயகர் அப்பாவு பேசினார். சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி, பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகின்றது, என்ற பகுதியை சபாநாயகர் அப்பாவு அப்படியே வாசித்துக்காட்டினார். ஆளுநர் தவற விட்ட வார்த்தைகளை அப்பாவு அழுத்தம் திருத்தமாக சொன்னார்.

Tamil Nadu Assembly budget : Speaker Appavu took over the house as Governor RN Ravis did not complete his speech

வெளியேறிய ஆளுநர்: அதன்பின்தான் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆளுநர் ஆர். என் ரவி சுயமாக பேசி உரைக்கு எதிராக தமிழ்நாடு தீர்மானம் நிறைவேற்றினார். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பேச தொடங்கியதும் ஆளுநர் ஆர். என் ரவி அவையில் இருந்து வெளியேறினார்.தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய உரையை ஆளுநர் ஆர். என் ரவி முழுமையாக வாசிக்காததற்கு எதிராகவும், ஆளுநர் ரவி சுயமாக சில விஷயங்களை பேசியதற்கு எதிராகவும் தமிழ்நாடு சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் உடனே தீர்மானம் நிறைவேற்றினார். இதையடுத்து ஆளுநர் சுயமாக பேசிய உரை நீக்கப்பட்டு அரசு தயாரித்த முழு உரை சேர்க்கப்பட்டது.

இன்றும் அதேபோல் ஆளுநர் ரவி பாதி உரையை மட்டுமே நிகழ்த்தினார். அதன் காரணமாக சபாநாயகர் அப்பாவு முழு உரையை தற்போது பேசி வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+