ஓட்டு போடப்போறீங்களா.. குழப்பம் வேண்டாம்.. இதை வாசிச்சிட்டு போங்க!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் நாளை, ஏப்ரல் 6ம் தேதி, 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்களிக்கச் செல்லும் முன்பாக நீங்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள் இதோ:
- காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி, இரவு 7 மணிக்கு நிறைவடைகிறது

- வாக்குச்சாவடிக்கு வாக்களிக்கச் செல்வதற்கு முன்பு, உங்களது வாக்காளர் அடையாள அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்
- வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையைக் கொண்டுச் செல்லலாம்.
- தேசிய வாக்காளர் சேவை தளத்துக்குச் சென்று உங்கள் வாக்காளர் அடையாள அட்டையிலிருக்கும் எண்ணைப் பதிவு செய்து வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
- வாக்காளர் சீட்டை முன்கூட்டியே பெற்றுக் கொள்ளுங்கள். வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் போது, உங்களது வாக்காளர் சீட்டை பெற்றுக் கொள்வார்கள்
பூத் ஸ்லிப் இல்லாவிட்டாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் ஓட்டு போடலாம். - வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்திருந்தால்தான் ஓட்டு போட அனுமதிக்கப்படுவார்கள்
- 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்து விட்டு மீண்டும் வீடு திரும்ப வசதியாக இலவச காா் போக்குவரத்து சேவையை அளிக்க 'ஊபா்' நிறுவனத்தோடு தோ்தல் ஆணையம் இணைந்து செயல்படுகிறது
- சென்னை, திருச்சி மற்றும் கோவை ஆகிய நகரங்களைச் சோ்ந்த மூத்த குடிமக்களுக்கு மற்றும், மாற்றுத் திறனாளிகளுக்கு ஊபர் சேவை கிடைக்கும்
- காய்ச்சல் இருப்பவர்களுக்கு மற்றும் கொரோனா இருக்கும் வாக்காளர்களுக்கு கடைசி 1 மணி நேரத்தில் வாக்களிக்க வசதி செய்யப்படும்
- கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுக்கு கவச ஆடை அணிந்து ஓட்டுப்போட அனுமதிக்கப்படும்
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications