Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு கிட்டத்தட்ட சுமுகமாக முடிவடைந்துள்ளது. பல்வேறு யூகங்கள், அழுத்தங்கள் குறித்து தகவல்கள் பரவிய நிலையில், ஒரே நாளில் முக்கிய மூன்று கட்சிகளுடனான ஒப்பந்தத்தை நிறைவு செய்திருப்பது அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

2026 தேர்தலில் பாஜக சுமார் 50 தொகுதிகள் வரை எதிர்பார்த்ததாக தகவல்கள் வெளியான நிலையில், இறுதியாக 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல் பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 Edappadi Palaniswami bjp

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிய நிலையில், அதிமுக கூட்டணியில் இழுபறி நிலவுவதாகவும், டெல்லி தலைமை கூடுதல் இடங்களை வழங்குமாறு அழுத்தம் கொடுத்ததாகவும் பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. குறிப்பாக பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்டு நெருக்குவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

2026 சட்டசபை தேர்தல்

இந்தச் சூழலில், இன்று ஒரே நாளில் மூன்று முக்கிய கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை உறுதி செய்திருப்பது, இபிஎஸ் எடுத்த அதிரடி அரசியல் முடிவாக பார்க்கப்படுகிறது. அதிமுக அணியில் இரட்டை இலக்க தொகுதிகளைப் பெற்ற கட்சிகள் இம்மூன்றே என்பதும் கவனிக்கத்தக்கது. கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அப்போது பாஜக 2.62 சதவீத வாக்குகளுடன் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன்பின்னர் அண்ணாமலை மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, பாஜக வளர்ச்சி வேகமெடுத்ததாக கட்சியினர் கூறி வந்தனர்.

அதிமுக கூட்டணி

2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இல்லாமல், பாஜக தனி அணியாக பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 11.24 சதவீத வாக்குகளைப் பெற்றது. இதன் அடிப்படையில், 2026 தேர்தலில் 50 தொகுதிகள் வரை அல்லது குறைந்தபட்சம் 39 தொகுதிகள் வேண்டுமென பாஜக வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இறுதியில் 27 தொகுதிகளிலேயே சமரசம் ஏற்பட்டுள்ளது.

அதிமுக பாஜக

அன்புமணி ராமதாஸ், தலைமையிலான பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2021 தேர்தலில் பாமக, அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிட்டு 3.80 சதவீத வாக்குகளுடன் 5 தொகுதிகளை வென்றது. அதன்பின்னர் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக அணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்டு 4.33 சதவீத வாக்குகளைப் பெற்றது. இதற்கிடையில் பாமகவில் ஏற்பட்ட பிளவு அரசியல் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அதிகாரபூர்வ பாமக அன்புமணி தலைமையிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.

அன்புமணி ராமதாஸ்

மேலும், ஏற்கனவே பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா இடமும் வழங்கப்பட்டிருப்பது, கூட்டணியில் பாமகவின் நிலையை உறுதிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. அதே போல், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2021 தேர்தலில் தனி அணியாக 165 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக, 2.35 சதவீத வாக்குகளைப் பெற்றது. பின்னர் 2024 தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து 2 தொகுதிகளில் போட்டியிட்டு சுமார் 1 சதவீத வாக்குகளைப் பெற்றது.

கூட்டணி ஒப்பந்தம்

இந்தச் சூழலில், தற்போது 11 இடங்கள் கிடைத்திருப்பது, அமமுக மீண்டும் சட்டமன்றத்தில் கால்பதிக்க முயற்சியாக பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணியில் இன்னும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமாக, புதிய நீதிக் கட்சி, ஐஜேகே, தம்முக உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த கட்சிகளுக்கு ஒற்றை இலக்க தொகுதிகள் மட்டுமே வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும், விரைவில் அதற்கான அறிவிப்புகளும் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி

மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், தற்போது பாஜக, பாமக, அமமுக ஆகிய மூன்று கட்சிகளுக்கு மொத்தமாக 56 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள தொகுதிகளில் சிறிய கட்சிகளுக்கு 10 முதல் 13 இடங்கள் வரை வழங்கப்பட்டாலும், அதிமுக சுமார் 165 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளது. 2021 தேர்தலில் அதிமுக 167 தொகுதிகளில் போட்டியிட்டது. அதேபோல் இந்த முறை 165க்கு அருகிலான எண்ணிக்கையை வைத்திருப்பது, இபிஎஸ் தனது கட்சியின் செல்வாக்கை குறைக்காமல் கூட்டணியை கொண்டு செல்லும் வகையில் கணக்கு போட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் சொல்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+