Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கழகங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்திய சுயேச்சைகள்! 2021 சட்டமன்ற தேர்தல்.. டாப் 10 இவுங்கதான்.. ரிவைண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. ஜனநாயக திருவிழா தொடங்கியுள்ள நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் நடந்த சில சுவாரசியமான நிகழ்வுகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில், 2021 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிக வாக்குகள் பெற்று கவனம் பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள், எந்த தொகுதி என்ற விவரத்தை பார்க்கலாம்..

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர் தேர்வு, தொகுதி பங்கீட்டில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த முறை சட்டமன்ற தேர்தல் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Assembly Elections Tamil Nadu Election 2026 Independents Tamil Nadu Election 2021 2026

2021 சட்டசபை தேர்தல் முடிவு

தேர்தலுக்கு இன்னும் ஒருமாதமே உள்ள நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நடைபெற்ற சுவாரசியமான மற்றும் கவனிக்கத்தக்க நிகழ்வுகளை ரீவைண்ட் ஆக பார்த்து வருகிறோம். அந்த வகையில், சுயேச்சையாக போட்டியிட்டு அரசியல் களத்தை அதிரவைத்ததோடு, அப்போது ஆளும் கட்சியாக இருந்த அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுக வேட்பாளர்களுக்கே டஃப் கொடுத்து.. வெற்றி வாய்ப்பை பறித்து விடுவார்களோ என கலக்கத்தை ஏற்படுத்திய சில வேட்பாளர்கள் லிஸ்டை இங்கே பார்க்கலாம்.

கவனம் ஈர்த்த ஹரி நாடார்

ஆலங்குளம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட ஹரிநாடார் 37, 727 வாக்குகளை பெற்று கவனம் பெற்றார். அந்த தொகுதியில் அதிமுக சார்பில் மனோஜ் பாண்டியன் (தற்போது திமுக) மற்றும் திமுக சார்பில் பூங்கோதை போட்டியிட்டனர். மனோஜ் பாண்டியன் 74,153 வாக்குகளும், பூங்கோதை 70,614 வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம் சுமார் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மனோஜ் பாண்டியன் வென்றார்.

ஆனாலும் சுயேச்சையாக போட்டியிட்ட ஹரி நாடார் பெற்ற வாக்குகள், அந்த தேர்தலில் சுயேச்சை ஒருவர் பெற்ற அதிக வாக்காக அதுவே இருந்தது. ஆலங்குளம் தொகுதியில் உள்ள நாடார் சமுதாய வாக்குகளை குறிவைத்து ஹரி நாடார் அங்கு போட்டியிட்டார். வெற்றி கிடைக்காவிட்டாலும் சுமார் 13.41 சதவீத வாக்குகள் அவருக்கு கிடைத்தன. இவரை தவிர ஒரு சில வேட்பாளர்கள் சில ஆயிரம் வாக்குகள் பெற்று கவனம் பெற்றனர்.

வரும் தேர்தலில் மாறுமா?

தமிழகத்தில் கடைசியாக டிடிவி தினகரன் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆர்கே நகரில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்கு முன்னதாக 2006-ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தளி சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். சமீப காலத்தில் வேறு எந்த சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெறவில்லை.

வரும் தேர்தலில் இந்த வரலாறு மாறுமா? என்பதை பொறுத்து இருந்ததுதான் பார்க்க வேண்டும். 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஹரி நாடார் தவிர கவனம் ஈர்த்த மேலும் சில சுயேச்சை வேட்பாளர்கள் விவரங்களை பார்க்கலாம்.

குமாரபாளையும், விருகம்பாக்கம்

* குமாரபாளையம் தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ஓம் சரவணா 7,342 வாக்குகள் பெற்று கவனம் பெற்றார். இந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தங்கமணி 1 லட்சத்து 800 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

* விருகம்பாக்கம் தொகுதியில் மறைந்த நடிகர் மயில்சாமி சுயேச்சையாக விசில் சின்னத்தில் போட்டியிட்டார். அவருக்கு 1,440 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. அதே தொகுதியில் போட்டியிட்ட மற்றொரு சுயேச்சை வேட்பாளர் குணசேகரன் என்பவர் 5,186 வாக்குகள் பெற்றார்.

* அறந்தாங்கியில் வேல்ராஜ் என்ற சுயேச்சை வேட்பாளர் 3,164 -வாக்குகள் பெற்றார். அதே தொகுதியில் வி. முத்து செல்வம் என்பவருக்கு 2,164 வாக்குகள் கிடைத்தன. அறந்தாங்கியில் காங்கிரஸ் - அதிமுக மோதின. இதில் காங்கிரஸ் வேட்பாளர் 81,835 வாக்குகள் பெற்றார்.

விளவங்கோடு, தூத்துக்குடி

* விளவங்கோடு தொகுதியில் 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் விஜயதாரணி (தற்போது பாஜக) போட்டியிட்டார். இந்த தொகுதியில் சாமுவேல் ஜார்ஜ் கலைஅரசர் என்ற சுயேச்சை வேட்பாளர் 3,541 வாக்குகள் பெற்றார்.

* வேப்பனஹல்லி தொகுதியில் கேபி முனுசாமி வென்றார். இந்த தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கிய வேட்பாளர் அப்துல் அசித் அமனுல்லா என்பவர் 3,022 வாக்குகள் பெற்றார்.

* தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட சிவனேஷ்வரன் 2,866 வாக்குகள் பெற்றார். இந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கீதா ஜீவன் வென்றார்.
* திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்ட ஆறுமுகம் 2005 வாக்குகள் பெற்றார்.

உசிலம்பட்டி தொகுதி

* ஒரத்தநாடு தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் மூக்கையன் 2041 வாக்குகள் பெற்றார். இந்த தொகுதியில் அதிமுகவின் வைத்திலிங்கம் வெற்றி பெற்றார்

* உளுந்தூர் பேட்டையில் மணிகண்னன் என்ற சுயேச்சை வேட்பாளருக்கு 2107 வாக்குகள் கிடைத்தன. இந்த தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் பெயரும் மணி கண்னன் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 1,15,451 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாம் இடம் பிடித்த அதிமுக வேட்பாளர் குமரகுரு 1,10,195 வாக்குகள் பெற்றார்

* உசிலம்பட்டி தொகுதியில் சுயேச்சையாக களம் இறங்கிய ஆறுமுகம் என்பவர் 1247 வாக்குகள் பெற்றார். வந்தவாசியில் சுயேச்சையாக களம் இறங்கிய மணிகண்டன் என்பவர் 1,264 வாக்குகள் பெற்றார். இந்த தொகுதியில் திமுக சார்பில் களமிறங்கிய அம்பேத்கர் 1,02,064 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+