பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கிட்டை பாதி முடித்துள்ளது இந்த நிலையில் அதிமுக பாஜக கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கிட்டு பேச்சு வார்த்தை முடிவுக்கு வரவில்லை எடப்பாடி பழனிச்சாமி டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்று பாஜக தேர்தல் பொறுப்பாளரான பியூஸ் கோயில் தமிழகம் வருவார் எனவும், இதன் மூலம் தொகுதி பங்கீடு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், பியூஷ் கோயலின் சென்னை பயணம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாநில அரசியல் களம் தற்போது மிகுந்த பரபரப்புடன் இயங்கி வருகிறது. இதற்கிடையில், ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை பெரும்பாலும் நிறைவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
2026 தமிழக சட்டசபை தேர்தல்
ஆனால் எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணியில், குறிப்பாக பாஜகவுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் இன்னும் இறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயல் இன்று மதியம் சுமார் 12 மணியளவில் சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் நாளை மாலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக பாஜக கூட்டணி
இந்த சந்திப்பின் போது பாஜகவுக்கு தமிழகத்தில் 27 முதல் 29 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக சென்னை நகரில் உள்ள முக்கிய தொகுதிகளான வேளச்சேரி, மயிலாப்பூர் மற்றும் தியாகராய நகர் போன்ற இடங்களை பாஜக கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தொகுதிகள் நகர்ப்புற வாக்காளர்கள் அதிகம் உள்ள முக்கிய பகுதிகள் என்பதால், இவை குறித்து கடுமையான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தொகுதி பங்கீடு
மற்றொருபுறம், அதிமுக சார்பில் ஏற்கனவே தொகுதி பங்கீட்டிற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் அமைச்சர்களான கேபி முனுசாமி மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். இக்குழு, கூட்டணியில் இடம்பெற்றுள்ள அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி
இந்த அரசியல் நகர்வுகளுக்கிடையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் டெல்லி பயணம் மேற்கொண்டது முக்கிய கவனம் பெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் டெல்லி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன்
அதேபோல், அன்புமணி ராமதாஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரும் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டிருப்பது கூட்டணியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவுகள் விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
பியூஷ் கோயல் வருகை
இந்நிலையில், இன்று பியூஷ் கோயலின் சென்னை வருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிமுக-பாஜக கூட்டணிக்குள் நிலவி வரும் தொகுதி பங்கீடு குழப்பங்களுக்கு தீர்வு காணப்படும் எனவும், இந்த சந்திப்புக்குப் பிறகு, இரு கட்சிகளுக்கும் இடையிலான அதிகாரப்பூர்வ தொகுதி பங்கீடு ஒப்பந்தம் விரைவில் அறிவிக்கப்படலாம் அதிமுக- பாஜகவினரும், கூட்டணி கட்சியினரும் எதிர்பார்த்தனர். ஆனால், இந்நிலையில், பியூஷ் கோயலின் சென்னை பயணம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சி தலைவர்களுடன் கோயல் இன்று பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுருந்த நிலையில், இன்று
அன்புமணி, டிடிவி தினகரன் ஆகியோர் டெல்லியில் அமித்ஷாவை சந்திக்கவுள்ளனர். இதனால் கோயலின் சென்னை பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications