டாக்டர் ராமதாஸூடன் மீண்டும் கை கோர்க்கும் வேல்முருகன்! சென்னையில் 'சைலண்ட்டாக' நடந்த பரபர சந்திப்பு!
சென்னை: தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் (தவாக) பண்ருட்டி தி.வேல்முருகன் எம்,.எல்.ஏ.வை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் (பாமக) டாக்டர் ராமதாஸ் அறிவுறுத்தலின் பேரில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் சென்னையில் இன்று சந்தித்தது அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது. பாமகவில் இருந்து வெளியேறி டாக்டர் ராமதாஸுக்கு எதிராக அரசியல் கட்சி நடத்தி வரும் நிலையில் வேல்முருகனுடன் பாமக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியிருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சியில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸுக்கு அடுத்ததாக அணிவகுத்த 2-ம் கட்ட தலைவர்களில் பண்ருட்டி எம்.எல்.ஏ.வாக இருந்த வேல்முருகன் முதன்மையானவர். பாமகவின் எம்.எல்.ஏ.வாக 2001. 2006 தேர்தல்களில் வென்றவர். பாமகவின் இணை பொதுச்செயலாளராகவும் பதவி வகித்தார் வேல்முருகன். 2011-ம் ஆண்டு பாமகவில் இருந்து வேல்முருகன் நீக்கப்பட்டார்.

ஈழத் தமிழர் பிரச்சனையில் பாமக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வேல்முருகன் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் வேல்முருகனுக்குப் பின்னால் வட தமிழ்நாட்டில் பெருந்திரளான இளைஞர்கள் அணிதிரண்டனர். இதனையடுத்து பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்த வேல்முருகன் ஆதரவாளர்கள் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு 2012-ல் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உருவானது. இதேபோல பல்வேறு அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒன்றும் உருவாக்கப்பட்டது.
கடந்த 13 ஆண்டுகளாக பாமகவுக்கு எதிராக வட தமிழகத்தில் செல்வாக்குடன் இயங்கி வருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. கடந்த சில மாதங்களாக பல்வேறு தமிழ் தேசிய இயக்கத்தினர், கட்சிகள் தங்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைத்தும் வருகின்றனர். சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய பெரும்பாலானோர் வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சியில்தான் இணைந்தும் வருகின்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் திரு.ஜெயராமன். அவர்களின் தலைமையில் சென்னை மாவட்ட முக்கிய நிர்வாகிகள் என்னை… pic.twitter.com/1wVsxIEPDo
— Velmurugan.T (@VelmuruganTVK) March 12, 2025
தற்போது வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திமுக தலைமையிலான கூட்டணியில் நீடித்து வருகிறது. அண்மையில் திமுக தலைமையை வேல்முருகன் கடுமையாக விமர்சித்தாலும் தற்போது திமுக தலைமையுடன் நல்லுறவுடன் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் வேல்முருகனை இன்று பாமக நிர்வாகிகள் திடீரென சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது பாமக வெளியிட்ட நிழல் நிதி அறிக்கை மற்றும் வேளாண் நிழல் நிதி அறிக்கை ஆகியவற்றை வேல்முருகனிடம் பாமக நிர்வாகிகள் வழங்கினர்.

இந்த சந்திப்பு தொடர்பான படங்களை வேல்முருகன் தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளதுடன், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் ஜெயராமன் தலைமையில் சென்னை மாவட்ட முக்கிய நிர்வாகிகள் என்னை நேரில் சந்தித்து வழங்கினார்கள். நிதிநிலை அறிக்கைகளை என்னை நேரில் சந்தித்து வழங்க அறிவுறுத்திய மருத்துவர் அய்யா மற்றும் மருத்துவர் சின்னய்யா ஆகியோருக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
2026-ல் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு நேசக் கரம் நீட்டியிருப்பது பெரும் கவனம் பெற்றிருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications