திடீரென வாய்ஸை உயர்த்தும் திமுக கூட்டணி கட்சிகள்.. பின்னணியில் விஜய்? அனல் பறக்கும் அரசியல்
சென்னை: நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி இருக்கும் சூழ்நிலையில் திமுகவிடம் தங்களுக்கான தொகுதிகளை கறாராகப் பேசக் கூடிய வாய்ப்பு கிடைத்துவிட்டதாகவே கூட்டணிக் கட்சிகள் நினைக்கின்றன. இதன் வெளிப்பாடாகவே அண்ணா திமுகவை விசிக அழைப்பது, முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை காங்கிரஸ் விமர்சிப்பது என அடுத்தடுத்த நிகழ்வுகள் அரங்கேறுவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தல் களம் எப்படி இருக்கப் போகிறது? என்பதற்கான முன்னோட்ட நிகழ்வுகள் தொடங்கிவிட்டன. 2026 சட்டசபை தேர்தலில் புதிய வரவாக நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்குகிறது. ஏற்கனவே திரைப்பட இயக்குநர் சீமான் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் தமிழர் கட்சி நடத்தி வந்தாலும் "கூட்டணி" என்ற விளையாட்டில் அவர் இறங்கியதே இல்லை. 2026 தேர்தலிலும் 'தனித்துப் போட்டி" என்பதில் சீமான் உறுதியாக இருப்பதால் கூட்டணி விளையாட்டுகளில் அவர் சேர்க்கப்படுவதில்லை.

நடிகர் விஜய் கட்சி நிலைப்பாடு என்ன?: ஆனால் நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடுமா? எந்தக் கூட்டணியில் இணையும்? என்கிற கேள்விகளுக்கு இனிதான் விடை கிடைக்கும். தமிழ்நாட்டு மக்களை விடுதலை செய்வதற்காக தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி இருப்பதாகவே விஜய் கூறி வருகிறார். அப்படியானால் ஆளும் திமுகவுக்கு எதிரான அணியில்தான் நடிகர் விஜய் இருக்கக் கூடும். அப்படி திமுகவுக்கு எதிரான பாஜக, அதிமுக அணிகளில் நடிகர் விஜய் கைகோர்க்க அதிகம் வாய்ப்பிருப்பது அதிமுகவுடன் மட்டுமே. அதிமுகவுக்கும் தேமுதிகவை தவிர பெரிய அரசியல் கட்சிகள் கூட்டணியில் இல்லை. இதனால் நடிகர் விஜய், கை கோர்க்க முன்வந்தால் அண்ணா திமுக பெரும் மகிழ்ச்சியடையும்.
திமுகவின் வியூகம்: அதேநேரத்தில் நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி இருப்பது ஆளும் திமுகவுக்கு நெருக்கடிதான். இதை மறுப்பதற்கு இல்லை. 2026 தேர்தல் களத்தில் திமுகவை விமர்சித்துதான் நடிகர் விஜய் பிரசாரம் செய்வார். என்னதான் விஜய் பிரசாரம் செய்தாலும் என்னதான் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தாலும் வலிமையான கூட்டணியை தக்க வைத்துக் கொண்டால் சமாளித்துவிட முடியும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு.
நெருக்கடியில் திமுக: திமுகவுக்கு உள்ள இந்த இக்கட்டான நிலை அதாவது நடிகர் விஜய் வருகையால் ஏற்படும் நெருக்கடி, அதிமுகவுடன் கை கோர்ப்பதற்கான வாய்ப்புகள் ஆகியவை தங்களுக்கான "பேரம்" பேசுகிற வாய்ப்பை- திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து கூடுதல் தொகுதிகளைப் பெறுகிற வாய்ப்பை அதிகமாக்கி இருக்கிறது என்பதுதான் திமுக கூட்டணிக் கட்சிகளின் நம்பிக்கை.
திமுக கூட்டணி கட்சிகளுக்கான வாய்ப்புகள்: ஏனெனில் திமுக தலைமையிலான கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு அதிமுக அல்லது நடிகர் விஜய் என்கிற இரு வாய்ப்புகள் உள்ளன. திமுக கூட்டணி சிதறி அந்த கட்சிகள் தங்களுடன் கை கோர்த்தால் அதிமுகவும் சரி, நடிகர் விஜய் தரப்பும் சரி மகிழ்ச்சியடையத்தான் செய்யும். திமுகவோ இந்த வாய்ப்பை அவ்வளவு எளிதாக கொடுக்கவும் விரும்பாது. அதனால் கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடிக்கு இணங்குகிற நிலைமைக்குதான் திமுக தள்ளப்படும்.
சீண்டிப் பார்க்கும் விசிக, காங்கிரஸ்: இதனை உள்வாங்கிக் கொண்டுதான் மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவை அழைக்கிறோம் என்கிறது விசிக; முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை எங்களுக்கு போதுமான பாதுகாப்பு தரவில்லை என்கிறது காங்கிரஸ். இந்த அக்னி பரீட்சையில் திமுகவும் முதல்வர் ஸ்டாலினும் எப்படி ஜெயிக்கிறார்கள் என்பது அடுத்தடுத்து தெரிந்துவிடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!












Click it and Unblock the Notifications