DMK Congress: 2 மாதங்களாக வெயிட் பண்ணுறோம்.. திமுக ரொம்ப லேட் பண்ணுது! விரக்தியாக சொன்ன காங்கிரஸ் கிரிஷ் சோடங்கர்
சென்னை: கடந்த 2021 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளை திமுக ஒதுக்கியிருந்த நிலையில் இந்த தேர்தலிலும் 25 தொகுதிகள் தான் ஒதுக்க முடியும் என திமுக கூறியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கூட்டணி பேச்சு தொடர்பாக "திமுகவின் பதிலுக்கு காத்திருக்கிறோம் என்று தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ளன. இந்த தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக, அதிமுக கூட்டணிகள், தவெக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டி உறுதியாகியுள்ளது.

திமுக - காங்கிரஸ் கூட்டணி
இதில் ஆளும் திமுக தனது கூட்டணி கட்சிகளை அப்படியே தக்க வைத்துக்கொண்டுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள் வெளியிடும் கருத்துகள் அவ்வப்போது கூட்டணிக்குள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சி மேலிடம் தவெக பக்கம் செல்ல விரும்புவதாக ஆரம்பத்தில் அரசியல் வட்டாரத்தில் கிளப்பி விடப்பட்டது.
ஆனால், டெல்லிக்கு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை அழைத்து ராகுல் காந்தி, கார்கே ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பிறகாக, இந்த பேச்சு அடிபட்டு போனது. எனினும், தமிழக காங்கிரஸ் கமிட்டியில் உள்ள சில தலைவர்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
கடந்த தேர்தலை போல 25 தொகுதிகள் தான்
அதேபோல, இந்த முறை காங்கிரஸ் கட்சி 2021 சட்டசபை தேர்தலை விட அதிக இடங்களில் களமிறங்கவும் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதற்கு திமுக தயக்கம் காட்டி வருகிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் ஒதுக்கப்பட்ட அதே இடங்கள் தான் கிடைக்கும். 2021-ல் இந்த தொகுதிப் பங்கீட்டு ஃபார்முலா சிறப்பாகச் செயல்பட்டது. இந்த முறையும் இதுவே தொடரும்,'' என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதி ஒதுக்கப்பட்டது. அதில் காங்கிரஸ் 18 இடங்களில் வெற்றி பெற்றது. இதே எண்ணிக்கையில்தான் தொகுதி ஒதுக்க முடியும் என்று கறாராக திமுக கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே, கூட்டணி பேச்சு தொடர்பாக "திமுகவின் பதிலுக்கு காத்திருக்கிறோம் என்று தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 மாதங்களாக காத்திருக்கிறோம்
கிரிஸ் சோடங்கர் இது தொடர்பாக கூறுகையில், "கூட்டணி பேச்சு தொடர்பாக திமுகவின் பதிலுக்கு காத்திருக்கிறோம்.. 2 மாதங்களாக காத்திருக்கிறோம்.. கூட்டணிப் பேச்சு இதுவரை தொடங்கவில்லை.. தேர்தலுக்கு இன்னும் சில காலமே இருக்கிறது..
திமுக தரப்பிலிருந்து ஏன் இவ்வளவு தாமதம் என தெரியவில்லை" என்று கூறியுள்ளார். ஏற்கனவே காங்கிரஸ் - திமுக இடையே புகைச்சல் ஏற்பட்டுள்ள நிலையில், கிரிஷ் சோடங்கரின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications