Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மொத்தம் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஏன் தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகள் உருவாக்கப்பட்டது? எதற்காக சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கையை 200 ஆக குறைக்காமல் அல்லது 300 ஆக அதிகரிக்காமல் 234 என்று நிர்ணயம் செய்யப்பட்டது? என்பது உங்களுக்கு தெரியுமா? இதன் பின்னணியில் உள்ள தகவலை இங்கு பார்க்கலாம்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. ஏப்ரல் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஒரே கட்டமாக 234 சட்டசபை தொகுதிகளுக்கும் அன்றயை தினம் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அதன்பிறகு மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

tamil-nadu-assembly-election-how-tamil-nadu-gets-234-assembly-constituency-what-happend-in-1963-de

தமிழகத்தில் இந்த முறை 5 முனை போட்டி நிலவ உள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர், விஜயின் தமிழக வெற்றிக் கழகம், ராமதாஸ் அணி - சசிகலாவின் கட்சி கூட்டணி என மொத்தம் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 234 தொகுதிகள்

தற்போது திமுக, அதிமுக கட்சிகள் தொகுதி பங்கீட்டை விரைவுப்படுத்தி உள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு சீட் வழங்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. 234 சட்டசபை தொகுதிகள் உள்ள தமிழகத்தை எடுத்து கொண்டால் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இது அனைவருக்கும் தெரிந்தது தான்.

ஏன் 234 தொகுதிகள்?

ஆனால் என்றாவது யோசித்து இருக்கீங்களா? தமிழ்நாடு 234 சட்டசபை தொகுதிகளாக பிரிக்கப்பட்டது? ஏன் சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கையை ஏன் 200 ஆக குறைக்கவில்லை. எதற்காக 250 அல்லது 300 ஆக அதிகரிக்கவில்லை? யோசித்து இருக்கிறீர்களா?.

நம்மில் பலரும் இதனை யோசித்து இருக்க மாட்டோம். ஒருசிலர் யோசித்து இருக்கலாம்? அதில் சிலருக்கு விடை கிடைத்து இருக்கலாம்.. பலருக்கும் விடை கிடைக்காமல் போய் இருக்கலாம். உண்மையில் எப்படி தமிழகம் 234 சட்டசபை தொகுதிகளாக பிரிக்கப்பட்டது? என்பது பற்றிய சுவாரசிய தகவலை அறிந்து கொள்ளுங்கள்.

மாறி கொண்டே வந்த எண்ணிக்கை

தமிழ்நாடு மெட்ராஸ் மாகாணமாக இருந்தபோது 1952ல் 375 சட்டசபை தொகுதிகள் இருந்தன. 1953ல் ஆந்திரா தனியாக பிரிக்கப்பட்டதால் தொகுதிகளின் எண்ணிக்கை 231 ஆக குறைக்கப்பட்டது. அதன்பிறகு மலபார்சில பகுதிகள் தற்போதை கேரளாவுடனும், சில இடங்கள் கர்நாடகாவுடனும் இணைக்கப்பட்டது. இதனால் தொகுதிகளின் எண்ணிக்கை 1956ல் 190 ஆனது. பிறகு மறுசீரமைப்பு செய்ததால் 1957 ல் 205 ஆக அதிகரித்தது. 1962ல் ஆந்திராவுடனான எல்லை மாற்றத்தால் தொகுதி 206 ஆக அதிகரிக்கப்பட்டது. பிறகு தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்தின் பரிந்துரைப்படி 1967 சட்டசபை தேர்தலில் இருந்து இன்று வரை தமிழக சட்டசபை தொகுதிகள் எண்ணிக்கை 234 ஆக உள்ளது.

1963ல் நடந்த விஷயம்

இதன் பின்னணியில் சுவாரசிய விஷயம் உள்ளது. அதாவது 1961ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் (Delimitation Commission) )இந்தியாவில் சட்டசபை தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தது. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளின் எல்லைகள் வரையறை செய்ய முடிவு செய்யப்பட்டது. அந்த ஆணையத்தின் தலைவராக நீதிபதி ஜேஎல் கபூர் மற்றும் உறுப்பினர்களாக சிபி சின்ஹா மற்றும் கேவிகே சுந்தரம் இருந்தனர்.

லோக்சபா தொகுதிக்கு 6 சட்டசபை தொகுதிகள்

இந்த குழுவின் பணி என்னவென்றால் ஒவ்வொரு மாநிலத்துக்கும் லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதிகளை நிர்ணயம் செய்வது தான். இந்த குழு மெட்ராஸ் மாநிலத்தில் (இப்போது தமிழ்நாடு) லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை 41ல் இருந்து 39 ஆக குறைத்தன. அதன்பிறகு சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்தனர்.

ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் உட்பட்டு எத்தனை சட்டசபை தொகுதிகள் இருக்க வேண்டும் என்று ஆணையம் கணக்கிட்டது. அதுவரை 5 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதி என்று இருந்தது. ஆனால் அந்த தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்தினர் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 6 சட்டசபை தொகுதிகள் என்று தொகுதியை கொண்டு வர முடிவு செய்தனர்.

1967 முதல் இன்று வரை

அதன்படி 39 நாடாளுமன்ற தொகுதிகள் × 6 சட்டசபை தொகுதிகள் = 234 என்று பிரிக்கப்பட்டது. இப்படியாக தமிழகத்திற்கான சட்டசபை தொகுதிகள் 234 என்று உருவானது. நம் நாட்டில் ஒவ்வொரு நாடாளுமன்றத்துக்கு உள்ளே இருக்கும் சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். ஆனால் தமிழ்நாட்டில் இந்த 1:6 என்ற விகிதம் 1963ல் முறைப்படுத்தப்பட்டது. 1967 முதல் தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. அதுவே இன்றுவரை மாற்றமில்லாமல் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+