ஓட்டு போட போறீங்களா? Voter ID இல்லாவிட்டாலும் இந்த 12 டாக்குமென்ட் இருந்தால் போதும்! ஆனால் ஒன்று!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று தொடங்கும் நிலையில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் 12 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்.

தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு இந்த 39 நாட்களில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வந்தன. இந்த பிரச்சாரங்கள் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் ஓய்வடைந்தது. இன்றைய தினம் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு முடிவடைகிறது.

tamil nadu assembly election 2026 voter id card 2026

வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை கையில் இல்லாதவர்கள், தேர்தலின்போது தங்களின் அடையாளத்தை நிரூபிக்க 12 மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தலாம் என இந்தியத் தேர்தல் ஆணையம் மார்ச் 17, 2026 அன்று டெல்லியில் அறிவித்தது.

வாக்காளர் அட்டை இல்லாதபட்சத்தில், வாக்களிக்கச் செல்லும்போது கீழே குறிப்பிடப்பட்டுள்ள 12 அசல் அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பிக்கலாம் என ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த ஆவணங்கள் புகைப்படத்துடன் கூடியதாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்க அனுமதிக்கப்படும் 12 மாற்று ஆவணங்கள்

வாக்காளர் அடையாள அட்டை இல்லாத பட்சத்தில், கீழே குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு அசல் ஆவணத்தைக் காண்பித்து வாக்களிக்கலாம்:

  1. ஆதார் கார்டு (Aadhaar Card)
  2. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA)அட்டை
  3. பணி அட்டை வங்கி அல்லது அஞ்சலகத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கணக்குப் புத்தகங்கள் (Passbooks)
  4. தொழிலாளர் அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீடு ஸ்மார்ட் கார்டு (Health Insurance Smart Card)
  5. ஓட்டுநர் உரிமம் (Driving License)
  6. பான் கார்டு (PAN Card)
  7. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் (NPR) கீழ் இந்தியப் பதிவாளர் ஜெனரலால் (RGI) வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு
  8. இந்திய கடவுச்சீட்டு (Indian Passport)
  9. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் (Pension Document)
  10. மத்திய/மாநில அரசுகள் அல்லது பொதுத்துறை நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய சேவை அடையாள அட்டைகள்
  11. நாடாளுமன்ற உறுப்பினர்கள்/சட்டமன்ற உறுப்பினர்கள்/சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகள்
  12. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட தனித்துவமான மாற்றுத்திறனாளி அடையாள அட்டை (UDID Card)

வாக்களிக்கச் செல்லும் நபர் மேற்கண்ட ஆவணங்களை வைத்திருந்தாலும், அவருடைய பெயர் அந்தத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பது கட்டாயம். பெயர் பட்டியலில் இருந்தால் மட்டுமே இந்த ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்க முடியும்.

பர்தா அணியும் பெண்கள் மற்றும் முக்காடு அணியும் பெண்களின் அடையாளத்தைச் சரிபார்க்க, வாக்குச் சாவடிகளில் பெண் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் தனிப்பட்ட இட வசதி மற்றும் கண்ணியமான முறையில் சரிபார்ப்பு நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+