நாடு முழுக்க கேஸ்.. அந்த ஒரு பேச்சுக்காக விடாது துரத்தும் கேஸ்.. உதயநிதி பிரமாண பத்திர சீக்ரெட்!
சென்னை: நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்கான பிரமாணபத்திரத்தில் அவர் குறிப்பிட்டுள்ள தகவல்கள் கவனம் பெற்றுள்ளன. அவருக்கு எதிரான வழக்கு விவரங்கள் இதில் உள்ளன.
முக்கியமாக நாடு முழுக்க அவருக்கு எதிராக பதியப்பட்டு உள்ள வழக்குகள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. இதில் ஒரு விவகாரத்திற்காக நாடு முழுக்க பல மாநிலங்களில் அவருக்கு எதிராக வழக்குகள் பதியப்பட்டு உள்ளன.

காலம் உருண்டோடினாலும், சில சர்ச்சைகள் மட்டும் நிழலாய் தொடரும். அதற்குச் சரியான உதாரணம், 2023 செப்டம்பர் மாதம் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்துப் பேசிய அந்தப் பேச்சு. "அப்பவே முடிஞ்சு போச்சு" என்று பலரும் நினைத்த நிலையில், அவர் தாக்கல் செய்துள்ள தேர்தல் பிரமாணப் பத்திரம், அந்தப் பழைய விவகாரம் இன்னும் அவரைச் சுற்றியே சுழன்று கொண்டிருப்பதை அம்பலப்படுத்தியுள்ளது.
அன்று ஒரு பேச்சு... இன்று வரை மூச்சு!
தமிழகத்தில் 'சனாதன ஒழிப்பு மாநாட்டில்' உதயநிதி பேசியது, டெல்லி வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் விளைவாக, நாட்டின் பல மூலைகளிலும் அவர் மீது சட்ட ரீதியான 'அம்புகள்' ஏவப்பட்டன. கிட்டத்தட்ட 10-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்களில், அந்த ஒரே ஒரு பேச்சுக்காக உதயநிதி இன்றும் பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார்.
தேசம் முழுவதும் அணிவகுக்கும் வழக்குகள்:
அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணபத்திர விவரங்களின்படி, அந்தப் பழைய பேச்சுக்காகப் போடப்பட்ட வழக்குகளின் பட்டியல் இதோ:
உத்தரப் பிரதேசம் (ராம்பூர்): வடமாநில அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், ராம்பூரில் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டது.
மகாராஷ்டிரா (மும்பை): மும்பையின் மீரா ரோடு பகுதியில் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகப் புகார்.
ராஜஸ்தான் (பியாவர்): இங்கும் சனாதன விவகாரத்திற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தனிநபர் புகார்கள் (Private Complaints): இவைதான் உதயநிதிக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளன.
பீகாரின் பாட்னா மற்றும் போஜ்பூர் நீதிமன்றங்களில் புகார்கள்.
ஜம்மு நீதிமன்றத்தில் ஒரு புகார்.
கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசத்தின் போபால் பகுதிகளில் தனிநபர் வழக்குகள்.
ராஜஸ்தானின் ஜோத்பூர் நீதிமன்றத்திலும் அந்தப் பழைய பேச்சுக்காகப் புகார் பதிவாகியுள்ளது.
பிரமாணப் பத்திரம் சொல்லும் உண்மை!
தேர்தல் ஆணையத்தில் உதயநிதி தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், நிலுவையில் உள்ள வழக்குகளின் பட்டியலில் இந்த 'சனாதன' வழக்குகள் தான் வரிசையாக அணிவகுக்கின்றன. "இத்தனை மாநில நீதிமன்றங்களிலும் உதயநிதி நேரில் ஆஜராக வேண்டுமா?" என்பதே அவரது ஆதரவாளர்களின் கவலையாக இருக்கிறது.
"வழக்குகளைக் கண்டு நாங்கள் அஞ்சுபவர்கள் அல்ல, இதெல்லாம் திராவிட மண்ணின் கொள்கை முழக்கத்திற்கு கிடைத்த அங்கீகாரம்" என உதயநிதி தரப்பு கெத்து காட்டினாலும், மாநிலம் விட்டு மாநிலம் பயணிக்க வேண்டிய சட்டச் சிக்கல்கள் அவரைச் சற்றே யோசிக்க வைத்துள்ளன. ஆனால் இப்போதைக்கு அவர் நேரில் ஆஜராக வேண்டியது இல்லை.
அன்று உதயநிதி பேசியது, இன்றும் சட்ட ரீதியான விஸ்வரூபம் எடுத்துள்ளது. 2023-ல் வீசிய அந்தச் சனாதனக் காற்று, 2026 தேர்தலிலும் உதயநிதியின் 'அபிடவிட்' மூலம் அனலாகத் தகித்துக் கொண்டிருக்கிறது!
-
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications