தமிழக சட்டசபை கூடியது! இல கணேசன் முதல் பீலா வெங்கடேசன் வரை! புகைப்படத்துடன் இரங்கல்
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், கோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரம் என பரபரப்பான சூழலில் தமிழக சட்டசபை இன்று கூடியது. இன்று முதல் 4 நாட்களுக்கு நடைபெறுகிறது. கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் 41 பேருக்கு இரங்கல் செய்தி வாசித்தார் சபாநாயகர் அப்பாவு. அது போல் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்களின் புகைப்படங்களுடன் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டசபை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நேற்று நடந்தது. தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கி வரும் 17ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டசபையில் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் வாசிக்கப்படும். அப்போது அவர்களது புகைப்படம் அங்குள்ள திரையில் திரையிடப்படுகிறது. இது தமிழக சட்டசபை வரலாற்றில் முதன்முறையாக நடக்கிறது.
6 மாதங்களுக்குப் பிறகு, தமிழக சட்டசபை இன்று கூடுகிறது. சட்டசபை பாமக கட்சித் தலைவர் தொடர்பான மனுக்கள் அப்பாவுவின் பரிசீலனையில் உள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகிவிட்டனர். இது தொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சென்னை உயர்நீதிமன்றம் எஸ்ஐடி குழு அமைத்தது.
அது போல் தமிழகத்தில் தயாரித்த கோல்ட்ரிப் இருமல் மருந்து உட்கொண்ட மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த 24 குழந்தைகள் உடலுறுப்புகள் செயலிழந்து இறந்துவிட்டனர். இந்த மருந்து உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில் தமிழக சட்டசபை இன்று கூடியது. சபாநாயகர் அப்பாவு, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் 41 பேருக்கு இரங்கல் செய்தி வாசித்தார் சபாநாயகர் அப்பாவு. அது போல் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்களின் புகைப்படங்களுடன் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மறைந்த வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி, ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன், நாகாலாந்து ஆளுநராக இருந்த இல கணேசன், கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், சுதர்சன ரெட்டி உள்ளிட்டோருக்கு தமிழக சட்டசபை உறுப்பினர்கள் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து சட்டசபை கூட்டம் இன்று கலைந்தது. நாளை மீண்டும் தொடங்குகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications