ஜாதிவாரி கணக்கெடுப்பு, சிஏஏவுக்கு எதிர்ப்பு- சபாநாயகர் அப்பாவு வாசித்த ஆளுநர் உரை 10 பாயிண்ட்ஸ்
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல் புறக்கணித்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். சட்டசபையில் தேசிய கீதம் இசைக்கும் முன்னரே ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியிலேயே சபையில் இருந்து வெளியேறினார்.
தமிழ்நாடு சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. முன்னதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மரபுப்படி வரவேற்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தமது உரையை வாசிக்க தொடங்கினார். உரையை தமிழில் வாசிக்க தொடங்கிய ஆளுநர் , தேசிய கீதம் இசைக்கப்படவில்லை; சில பத்திகள் ஏற்புடையதாக இல்லை என கூறி சில நிமிடங்களிலேயே உரையை வாசிக்காமல் அமர்ந்தார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் வாசிக்க வேண்டிய உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
சபாநாயகர் அப்பாவு வாசித்த ஆளுநர் உரை முக்கிய அம்சங்கள்:
1.பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு திறம்பட செயல்படுகிறது
2.நமது மாநிலம் பல பேரழிவுகளை சந்தித்த போதிலும், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றம் ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க சாதனையை அடைந்துள்ளது
3.தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதியை ஒன்றிய அரசு தராதது வருத்தம் அளிக்கிறது
4.நிதி நெருக்கடிக்கு இடையே சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்ட பணிகளுக்கு தனது பங்களிப்பைவழங்குவதாக உறுதியளித்த மத்திய அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை
5.சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.
6.ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தும் என நம்புகிறோம்.
7.சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள சிஏஏ சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்
8.உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது 14.54 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ₹6.64 லட்சம் கோடி முதலீடுகள் செய்தவதற்கு நிறுவனங்களுடன் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது
9.புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34% அதிகரித்துள்ளது
10.கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் விளைவாகக் பேருந்துகளில் பெண்கள் பயணிப்பது 40% இருந்து 65% ஆக உயர்ந்து பெண்கள் எளிதாக பயனம் செய்யவும் முன்னேறவும் வழி பிறந்துள்ளது. இவைதான் சபாநாயகர் அப்பாவு வாசித்த ஆளுநர் உரையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் ஆகும்.
ஆளுநர் உரையை வாசித்து முடித்த உடன், தேசிய கீதம் இசைக்கப்படாதது குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் தனிப்பட்ட கருத்தை சுட்டிக்காட்டி பேசினார் சபாநாயகர் அப்பாவு. அப்போது ஆளுநரை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வளவு பெரிய வெள்ளம், புயல் ஏற்பட்டிருக்கிறது ஒரு பைசா கூட தரவில்லை, பல லட்சம் கோடி ரூபாய் PM CARE FUND-ல் உள்ளது. இந்திய மக்களால் கணக்கிடப்படாத, கணக்கு கேட்க முடியாத பணத்தில் இருந்தாவது ரூ50,000 கோடி ரூபாயை ஆளுநர் வாங்கி தந்தால் நன்றாக இருக்கும். சாவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கும், கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்தவர்கள் அல்ல நாங்கள் என வேண்டுகோள் விடுத்தார். மேலும் கோட்சே, சாவர்க்கர் வழிவந்தவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்றும் ஆளுநர் ரவி தெரிவித்த சொந்த கருத்துகள் சபை குறிப்பில் இடம் பெறாது என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டசபையில் இருந்து ஆளுநர் ரவி பாதியிலேயே வெளியேறினார். மேலும் ஆளுநர் வாசித்த உரை சட்டசபை குறிப்பில் இடம் பெறாது; தமிழ்நாடு அரசின் ஆளுநர் உரைதான் சட்டசபை குறிப்பில் இடம் பெறும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications