தமிழக சட்டசபையில் இன்று விஜய் துறையின் மானியக் கோரிக்கை! அப்போ Vijay Vs Udhay கன்ஃபார்ம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் இன்று 6 துறைகள் மீது மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. இந்த 6 துறைகளில் முதல்வர் விஜய்யின் துறையும் இருப்பதால் அவர் என்ன மாதிரியான பதிலை கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழக சட்டசபையில் கடந்த 5ஆம் தேதி அன்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அடுத்த நாள் 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

tamil nadu assembly joseph Vijay

அதைத் தொடர்ந்து 7, 10, 11 ஆகிய 3 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம்நடந்தது. கடந்த 12 ஆம் தேதி நிதியமைச்சர் மரியவில்சன். வேளாண்துறை அமைச்சர் வினோத் ஆகியோரின் பதிலுரையுடன் பட்ஜெட் மீதான விவாதம் நடந்து முடிந்தது.

சுதந்திர தினத்தையொட்டி அடுத்த 4 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடுக்கப்பட்டிருந்தது. கடந்த 17ஆம் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இதுவரை 18 துறைகள் மீது விவாதம் நடந்து முடிந்துவிட்டது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காரசார விவாதத்துடன் சட்டசபைக்கு இரு தினங்கள் விடுமுறை இருந்தது. இந்த நிலையில் இரு நாட்கள் கழித்து இன்று காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபை மீண்டும் கூடுகிறது.

அப்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, செய்தி மற்றும் விளம்பரம், எழுது பொருள் மற்றும் அச்சு, பள்ளிக் கல்வித் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, உயர் கல்வித் துறை ஆகிய 6 துறைகள் மீது மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

இந்த விவாதத்தில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சியினர் பேசுவார்கள். இந்த 6 துறைகளில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, முதல்வர் விஜய் வசம் உள்ளது. எனவே அவர் பதில் அளித்து பேசுவார் என தெரிகிறது. மேலும் செய்தி மற்றும் விளம்பரம், பள்ளிக் கல்வித் துறைக்கு ராஜ்மோகனும் உயர்கல்வித் துறைக்கு பெ.விஸ்வநாதனும் பேசி தங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+