ஓய்வூதிய திட்டம்.. ஏமாற்றமாக இருக்கு.. போராட்டத்தில் குதிக்க போவதாக சத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓய்வூதியத் திட்டம் தொடர்பான முதல்வர் அறிவிப்பில் ஏமாற்றம் அடைந்துள்ளதாக சத்துணவு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் சென்னையில் பேட்டியளித்துள்ளனர். மேலும் ஒரு வாரத்தில் காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்காவிட்டால் போராட்டத்தில் இறங்குவோம் என்றும் சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி வரும் 7 ஆம் தேதி முடிவு செய்வோம். அரசு எங்களுக்கு தினமும் ரூ.68 தான் ஓய்வூதியம் தருகிறது. மகளிர் உரிமைத் தொகை கூட எங்களுக்கு வழங்கப்படுவது இல்லை என்றும், எனவே கொடுத்த வாக்குறுதியினை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என்றும் சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

tamil-nadu-assured-pension-scheme-disappointment-us-nutritious-meal-workers-warn-of-protest

சென்னை தேனாம்பேட்டையில் சத்துணவு ஊழியர்கள் சங்கம் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 23 ஆண்டுகளாக போராடிய நிலையில் இன்று அவர்களுக்கு இனிப்பான செய்தியை அறிவித்து இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் இதற்கு அவருக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இருந்தபோதிலும், 40 ஆண்டு காலமாக கொத்தடிமை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு ஊழியர்கள் 40 ஆண்டு காலமாக போராடி காலமுறை தொகுப்பூதியம் கிடைக்காமல் காலிப்பணியிடங்களை நிரப்பாமல் இந்த அரசு காலம் தாழ்த்தி வருகிறது. ஜாக்டோ ஜியோ 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தியது. இதில் ஒரு கோரிக்கையை மட்டும் அரசு நிறைவேற்றி இருக்கிறது.

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மாதம் ரூ.2,000 கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த ஆட்சியிலேயே 7500 ரூபாய் ஓய்வூதியமாக கேட்டு போராடி வருகிறோம். இதனை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்ற இனிப்பான செய்திக்காக காத்திருந்தோம். ஆனால் எங்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

tamil-nadu-assured-pension-scheme-disappointment-us-nutritious-meal-workers-warn-of-protest

கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள் அனைவருமே வேலை செய்து கொண்டிருக்கும் போது ஊதியம் வாங்கிக்கொண்டு, அதற்கு பிறகு ஓய்வூதியம் இல்லாமல் பல இடங்களில் ரோட்டோரங்களிலும், கோவில்களிலும் பிச்சை எடுக்கும் நிலைமையில் சத்துணவு ஊழியர்கள் இருந்து வருகிறார்கள்.

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதியின் போது, சத்துணவு ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் தருவோம்.. ஓய்வூதியம் வழங்குவோம் என்று அறிவித்து இருந்தது. ஆனால் நான்கரை ஆண்டுகளாக காலங்களை கடத்திவிட்டு ஏமாற்றி வருகிறார்கள். தொகுப்பூதியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவோம் என்று 8097 பேர் நிரப்புவதாக சொல்லிவிட்டு இன்னும் பல இடங்களில் நிரப்பாமால் காலம் தாழ்த்தி வருகிறார்கள்.

ஒரு நேரம் உணவு உண்டு, இருமுறை பட்டினி கிடக்கும் நிலைமை இருந்து வருகிறது. சத்துணவு உதவியாளராக பெரும்பாலும் பெண்களே இருந்துவரும் நிலையில் அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கூட கிடைப்பதில்லை. இப்படி இருக்கும் போது எங்கள் வாழ்க்கைத் தரம் எப்படி உயரும்? இன்று இனிப்பான செய்தி வரும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் எங்களுக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியது.

அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி வரும் 7 ஆம் தேதி முடிவு செய்வோம். எனவே கொடுத்த வாக்குறுதியினை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும். ஒரு வாரத்தில் காலமுறை தொகுப்பு ஊதியம், ஓய்வூதியம் வழங்காவிட்டால் போராட்டத்தில் இறங்குவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+