தமிழ்நாடு உருவான நவம்பர் 1- தமிழ்நாடு தினமாக அரசு கொண்டாடனும்.. சிபிஎம் குரலுக்கு பாஜக ஆதரவு!
சென்னை: தமிழ்நாடு உருவான நவம்பர் 1-ஐ தமிழ்நாடு தினமாக தமிழ்நாடு அரசு கொண்டாட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
1956-ம் ஆண்டு நாட்டில் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இதனடிப்படையில் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்கள் உதயமாகின. அன்றைய சென்னை மாகாணமாகிய தமிழ்நாடு பல பகுதிகளை பறிகொடுத்தது. கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் நவம்பர் 1-ந் தேதியை மாநிலங்கள் உருவாகிய நாளாக கொண்டாடுகின்றன. ஆனால் தமிழ்நாடு நிலங்களை இழந்த நாள் என்பதால் கொண்டாடுவதில்லை. அண்மை காலமாக நவம்பர் 1-ந் தேதியை தமிழ்நாடும் கொண்டாட வேண்டும் என்கிற குரல் வலுத்து வருகிறது.

அண்ணாமலை: இது தொடர்பாக அண்ணாமலை தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மொழி வாரியாக மாநிலங்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு, இன்றைய எல்லைப் பகுதிகளோடு நம் தமிழ் மொழிக்கான மாநிலமாக நம் மாநிலம் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு தினமான இன்று, தமிழக மக்கள் அனைவருக்கும்
தமிழக பாஜக சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாடு தினம்: பெருமை மிகுந்த தமிழகம் இன்று, தெருவுக்குத் தெரு மதுக் கடைகளைத் திறந்து வைத்தும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தும் தனது பொலிவை இழந்து நிற்கிறது. தனது கையாலாகாத்தனத்தை மறைக்க, ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். அதில் ஒன்றுதான், தமிழகம் உருவான தினத்தை விட்டுவிட்டு, பெயர் மாற்றம் செய்த தினத்தைக் கொண்டாடுவது.

மாற்றுவது சரி அல்ல: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்று கூடப் பாராமல் தமிழகம் முழுவதும் அராஜகம் செய்து கொண்டிருக்கும் திமுகவினரை அடக்கி வைப்பதே, முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களுக்குச் செய்யும் பேருதவியாக இருக்குமே தவிர தன் விருப்பத்துக்கு, நம் மாநிலம் உருவாக்கப்பட்ட தினத்தை மாற்றுவது அல்ல. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
சிபிஎம்-க்கு ஆதரவு: முன்னதாக சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இதேபோல நவம்பர் 1 தினத்தை தமிழ்நாடு அமைப்பு தினமாக கொண்டாட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். தற்போது சிபிஎம் குரலுக்கு தமிழ்நாடு பாஜகவும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications