சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஆ.. பாஜகவை சாம்பாலாக்கி, "அஸ்தி"யை தமிழ்நாட்டிலேயே கரைச்சிட்டிங்களே.. திமுக ராஜீவ்காந்தி ஒரே போடு

திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி பாஜகவை விமர்சித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவின் ராஜீவ் காந்தி, பதிவிட்டுள்ள மீம்ஸ் ஒன்று, தமிழக பாஜக தரப்புக்கு எரிச்சலையும், கடுப்பையும் மீண்டும் ஏற்படுத்தி வருகிறது.. இதற்கு பலரும் திரண்டு வந்து பதிலடி தந்து கொண்டிருக்கிறார்கள்.

விரைவில் எம்பி தேர்தல் வரவுள்ளது.. 6 மாதத்துக்கு முன்பேயே பாஜக இதற்கான முனைப்பில் ஈடுபட்டு வருகிறது.. அந்தவகையில் தமிழகத்தை குறி வைத்து, கூடுதலாக காய் நகர்த்தி வருகிறது பாஜக.

பிரதமர் மோடி 2024 மக்களவை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவது குறித்தும் பரிசீலித்து வருவதாக தெரிகிறது.. அந்தவகையில், ராமநாதபுரத்தில் மோடி போட்டியிடக்கூடும் என்கிறார்கள்.

ஒருவேளை ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டால், அவரை எதிர்த்து போட்டியிட போவது யார்? அதன் களம் எப்படி இருக்கும் என்பது போன்ற அலசல்களும் எழுந்து வருகின்றன..

மோடி அரசின் வஞ்சகம்.. சிறுபான்மையினர் மீதான தாக்குதல்! கொந்தளித்த திமுக ராஜீவ் காந்தி - என்னாச்சு? மோடி அரசின் வஞ்சகம்.. சிறுபான்மையினர் மீதான தாக்குதல்! கொந்தளித்த திமுக ராஜீவ் காந்தி - என்னாச்சு?

 சூப்பர் அறிவிப்புகள்

சூப்பர் அறிவிப்புகள்

பிரதமர் மோடியை பொறுத்தவரை 2 தொகுதிகளில் போட்டியிட்டே ஆக வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது.. வழக்கமாக, காந்தி நகரில் போட்டியிட்டு கொண்டிருந்தவர் திடீரென வாரணாசியில் போட்டியிட நேர்ந்தது, முழுக்க முழுக்க இந்துத்துவா அரசியலை மையப்படுத்தியே என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.. கடந்த முறை வாரணாசியில் மோடி போட்டியிடுவதற்கு முன்பேயே, அங்கு ஏகப்பட்ட களப்பணிகள் நடந்தன. இன்னும் சொல்லப்போனால், கிட்டத்தட்ட ஒன்றரை வருடம், வாரணசாயிலேயே தங்கியிருந்து அதற்கான வேலைகளை பார்த்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. நிறைய அறிவிப்புகளையும், நலத்திட்டங்களையும் வெளியிட்டும் வந்தார்.

 ஸ்தலங்கள்

ஸ்தலங்கள்

இதற்கு பிறகுதான், பிரதமர் மோடி அங்கு போட்டியிடபோவதாக அறிவிப்பு வெளியானது. அந்தவகையில், இந்த முறையும், ராமநாதபுரத்தை குறி வைப்பதாக தெரிகிறது.. ஆன்மீகத் தலங்களான காசியையும் ராமேஸ்வரத்தையும் இணைத்து வளர்ச்சி அடைய செய்யும் பாஜகவின் நோக்கத்துக்கு ஏற்பவே, வாரணாசியிலும், ராமநாதபுரம் தொகுதியிலும் மோடி போட்டியிட இருப்பதாக தெரிகிறது.. அதற்காகத்தான், கடந்த எம்பி தேர்தலின்போதே, அதிமுக கூட்டணியில் இருந்தபோது, இந்த ராமநாதபுர தொகுதியை பாஜக கேட்டு வாங்கியது. சமீபத்தில் காசியில் தமிழ் சங்கமம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதும், இதற்கான அச்சாரம் போடுவதற்காகதான் என்று பாஜகவினர் சொன்னதாக, தி சண்டே கார்டியன் இதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

கரைச்சிட்டிங்களேடா

கரைச்சிட்டிங்களேடா

இந்நிலையில், "தமிழகத்தில் வித்தியாசமான ஒரு அரசியல் சூழல் உள்ளதாகவும் தாங்கள் திராவிடர்கள் என்று சொல்வதாகவும், தமிழ்நாடு எனக் கூறுவதை விட தமிழகம் எனக் கூறுவதே சரியாக இருக்கும்" என்று ஆளுநர் ரவியின் பேச்சு சர்ச்சையானது.. இதற்கு பிறகு, அரசு தயாரித்த அறிக்கையை சட்டமன்ற கூட்டத்தொடரில் வாசிக்காததும், அதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டன உரையின்போது ஆளுநர் அவையை விட்டு திடீரென வெளியேறியதும், இதற்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

 அஸ்தி நெருப்பு

அஸ்தி நெருப்பு

அத்துடன், மட்டுமல்லாமல், நாம் தமிழர் கட்சி சீமான், அமமுக டிடிவி தினகரன், போன்றோரும் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்ததும் என, 2 நாட்களில் தமிழக அரசியலே மிகுந்த பரபரப்பை தந்துவிட்டது. இதன் தொடர்ச்சியாக, பாஜகவை அஸ்தியாக்கி தமிழ்நாட்டிலேயே கரைத்து விட்டதாக, திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மீம்ஸ் ஒன்றினை பதிவிட்டுள்ளார்..

 நல்லாயிருக்குமே

நல்லாயிருக்குமே

அந்த மீம்ஸில், "இப்பத்தான் காசி தமிழ் சங்கமம் என்று எதையோ பேசி, தமிழ்நாட்டில் ஏதாவது பண்ணலாம்னு பாத்தோம்.. அதுக்குள்ள "தமிழ்நாடு" ன்னுற நெருப்பில் கையை வச்சி, மிச்சமிருந்த பாஜகவை சாம்பாலாக்கி, அஸ்தியை தமிழ்நாட்டிலையே கரைச்சிட்டிங்களேடா" என்று கிண்டல் அடித்துள்ளார். சட்டசபையை புறக்கணித்து ஆளுநர் வெளியேறியபோது, "ஆளுநர் தேசிய கீதத்தினை அவமதித்தது தேசவிரோத செயல்! ஆளுநர் ரவி ஒரு தேசவிரோதி!!சட்டசபையில் இருந்து பாதியில் ஓடிய ரவி தமிழ்நாட்டில் இருந்தும் பாதியில் தன் சொந்த ஊருக்கு ஓடினால் நன்றாக இருக்கும்!!" என்று ராஜீவ் காந்தி பதிவிட்டிருந்த நிலையில், இப்போது இன்னொரு ட்வீட்டும் எதிராக பதிவிட்டுள்ளது, பாஜக தரப்பினருக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது.

English summary
Tamil nadu BJP dissolved the ashes DMK student leader R rajiv gandhis tweet
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X