தமிழக அமைச்சர்கள் 3 பேருக்கு குறி வைத்த அண்ணாமலை.. உச்சநீதிமன்றத்தில் பாஜக அதிரடி கேவியட் மனு!
சென்னை: தமிழ்நாடு அமைச்சர்கள் பொன்முடி, கேகேஎஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கில் தங்களது கருத்தையும் அனுமதிக்க கோரி தமிழ்நாடு பாஜக திடீரென உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: திமுக அமைச்சர்கள் பொன்முடி, கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீதான ஊழல் வழக்கு விசாரணையில் தமிழக பாஜக சார்பாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மூன்று அமைச்சர்களின் சொத்துக் குவிப்பு வழக்குகளில் மாவட்ட முதன்மை நீதிபதி இவர்களை விடுவித்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் ஊழல் தடுப்பு பிரிவினர் மேல்முறையீடு செய்யவில்லை.
உயர்நீதிமன்றம் விசாரணை: திமுக அமைச்சர்களுக்கு எதிரான இந்த சொத்துக் குவிப்பு வழக்குகள் கையாளப்பட்ட விதம் சந்தேகத்துக்கிடமாக இருப்பதால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்குகள் தொடர்பான சீராய்வு மனு விசாரணையை தாமாக முன்வந்து எடுத்தார். இந்த வழக்குகள் கையாளப்பட்ட விதமும் தமிழக அரசின் விசாரணை அமைப்புகளின் போக்கும் அதிர்ச்சியளிப்பதாக நீதிபதி கவலை தெரிவித்திருந்தார்.
அதிகார பலத்தில் தமிழக அரசின் விசாரணை அமைப்புகளை முடக்கி, ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து எளிதில் தப்பித்துவிடலாம் என்ற திமுகவின் எண்ணம் நிறைவேறாது.
— K.Annamalai (@annamalai_k) October 29, 2023
திமுகவின் ஒவ்வொரு ஊழல் அமைச்சருக்கும் எதிராக சட்டப் போராட்டம் நடத்தி, அவர்களுக்கு சட்டரீதியான தண்டனை கிடைப்பதை @BJP4TamilNadu… pic.twitter.com/uTNTILlLeb
உச்சநீதிமன்றத்தில் அப்பீல்: அமைச்சர் பொன்முடி தனக்கு எதிராக உயர்நீதிமன்றம் தாமாக முன்வைத்து எடுத்த இந்த வழக்கு விசாரணையை ரத்து செய்யக் கோரியும் இடைக்கால தடை விதிக்க கோரியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இதேபோல அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரும் உச்சநீதிமன்றத்தை நாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக கேவியட் மனு: திமுக அமைச்சர்களுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு, இந்த வழக்குகளில் தமிழக பாஜக கருத்துகளை உச்சநீதிமன்றம் அனுமதிக்க வேண்ட்ம் என கோரி பாஜக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளோம். ஊழல் அமைச்சர்களுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி அவர்களுக்கு சட்ட ரீதியான தண்டனை கிடைப்பதை பாஜக நிச்சயம் உறுதி செய்யும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
-
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
திருப்பரங்குன்றம் தீபம்.. தவெக அரசின் நிலைப்பாடு.. ஓபனாக பேசிய சிபிஎம்! முக்கிய டிமாண்ட்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள் -
ஆம் ஆத்மி கட்சியில் 3 ஆண்டுகள் பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்! யார் இந்த ஆப்ஜித் தீப்கே? -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்!












Click it and Unblock the Notifications