ராஜ்நாத் வந்தாரு..நானும் மாட்டிக்கிட்டேன்! திமுக தான் எங்களுக்கு எதிரி..அண்ணாமலை இப்படி சொல்லிட்டாரே

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் கலந்து கொண்டது, கலைஞர் நாணய வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அண்ணாமலை பங்கேற்ற நிலையில், திமுக - பாஜக கூட்டணி என கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுகவை எதிர்க்கும் ஒரே கட்சி பாஜக‌ எனவும், ராஜ்நாத் சிங் மத்திய அமைச்சராக வந்த நிலையில், நானும் மாட்டிக் கொண்டேன் என கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை..

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"அவிநாசி அத்திக்கடவு திட்டம் முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என போராட்டம் அறிவித்திருந்தோம். பாஜக சொன்ன அடுத்த நாள் வேகமாக பணி செய்து திட்டத்தை துவக்கி உள்ளார்கள்.

Annamalai BJP dmk

மாநில அரசிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். விவசாய சங்கங்களுக்கும் நன்றி. தொடர் உண்ணாவிரதத்தில் இருந்து பல போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி. உண்மையான ஹீரோ விவசாயிகள். அதற்கு அணில் போல பாஜக உதவி உள்ளது.

கூடுதலாக பல குட்டைகளையும் இணைக்க வேண்டும். 10 நாட்களில் காட்டிய வேகத்தை முழுமையாக செய்ய வேண்டும். மக்களாக போராடியவர்களுக்கு கிடைத்த வெற்றி. நீண்ட கால திட்டங்களை நிறைவேற்ற பாஜக துணையாக நிற்கும். நம்பிக்கை இருக்கிறது. 1970 மின்சார கட்டண உயர்வுக்கு போராடிய விவசாயிகள் துப்பாக்கி சூட்டில் 3 விவசாயிகள் உயிரிழந்தனர். அவர்களுக்கு மணிமண்டபம் பாஜக அமைக்கும் . பாஜக கட்டிடத்தை அமைத்து விவசாயிகள் இடம் ஒப்படைத்து விடுவோம்.

கலைஞர் நாணயம் வெளியீடு மாநில அரசு நடத்தியது. மத்திய அரசு பங்கேற்றது. காமராஜர், அண்ணாதுரை, ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர், எம்.எஸ்.சுப்புலட்சுமி, கலைஞர் கருணாநிதி என நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசு விழாவாக நடைபெற்றது. மாநில அரசே செலவுகளை செய்துள்ளது. லேட்டரல் என்ட்ரி மூலம் 60 பேர் இணைந்துள்ளனர். இது தொடர்பாக பல கருத்துக்கள் உள்ளது. அனைவர் குரலுக்கும் மத்திய அரசு செவி சாய்க்கும். உரிய விளக்கம் வரும்.

கருணாநிதி அவர்களுக்கு கும்பிடு போடுவது தப்பில்லை. காலில் விழுவது தான் தவறு சித்தாந்த ரீதியில் எங்களுக்கு வேறுபாடு இருந்தாலும் அவருக்கு கும்பிடு போடுவதை பெருமையாக தான் நினைக்கிறேன்.
எனது வயது கூட அவர் அரசியல் அனுபவம் கிடையாது. 100வது ஆண்டு விழாவில் மரியாதை செய்வதை கூட கொச்சைப்படுத்தினால் தவறு. தமிழகத்திற்கு பணி செய்தவர்களுக்கு மரியாதை செலுத்த கூடாது என சொல்வதை என்ன சொல்வது.

திமுகவை எதிர்க்கும் ஒரே கட்சி பாஜக‌. தலைவராக என் மீதும் எடப்பாடி பழனிச்சாமி மீதும் போடப்பட்ட வழக்கு குறித்து பாருங்கள். நாங்கள் எதிரி தான். ஆர்.எஸ்‌.பாரதி மீது 1 கோடி வழக்கு போட்டுள்ளேன். என் மீது 5 கோடி வழக்கு போட்டுள்ளார்கள். மத்திய பிரதேச முதலமைச்சர் வந்தபோது நான் செல்லவில்லை. ஏனெனில் அவர் தமிழக தொழிலை ஈர்க்க வந்துள்ளார். கர்நாடக பாஜக அரசை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம் செய்தவர்கள் நாங்கள். புரட்சித்தலைவர் கட்சி காலை முதல் இரவு வரை என்னை வசைபாடுவதை பெருமையாக நினைக்கிறேன். " என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+