டெல்லி புறப்பட்டார் நயினார் நாகேந்திரன்.. அமித்ஷா, நட்டாவை சந்திக்கிறார்.. பின்னணி என்ன

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜேபி நட்டாவை டெல்லியில் சந்தித்து பேச உள்ளார். டிடிவி தினகரன், ஓ பன்னீர் செல்வத்தை என்.டி.ஏ கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக பேசப்படலாம் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, நான்குமுனை போட்டி உறுதியாகியுள்ளது. திமுக, அதிமுக - பாஜக, தவெக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி என தற்போதைய சூழல் படி உறுதி செய்யப்பட்டுள்ளது.

tamil-nadu-bjp-president-nainar-nagendran-leaves-for-delhi-likely-to-meet-amit-shah

நான்கு முனை போட்டி

எனினும், இந்த கூட்டணி நிலைப்பாடு மாறுதலுக்கு உட்பட்டது. எந்த கட்சி, யாருடன் கூட்டணி சேருவார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க முடியும். காங்கிரஸ் மட்டுமே திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து இருக்கிறது. ஆனால் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகளான திமுக, அதிமுக, மற்றும் தவெக சார்பில் எந்த குழுவும் அமைக்கப்படவில்லை. இருந்தாலும் திரைமறைவு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம்

அதிமுக தனது கூட்டணிக்குள் பாமக மற்றும் தேமுதிக கொண்டு வர விருப்பப்படுகிறது. அதற்கான மறைமுக பேச்சுவார்த்தை நடக்கிறது. அதேவேளையில், இப்போது கூட்டணியில் உள்ள பாஜக எத்தனை சீட்டுகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் அந்த கட்சியினர் இடையே ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நேற்று முன்தினம் நடத்தி முடித்த அதிமுக சூட்டோடு, சூட்டாக தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வாங்கும் பணியை 15-ந்தேதி தொடங்குகிறது.

அதேபோல, கூட்டணிக்கான கட்சிகளை முடிவு செய்ய எடப்பாடிக்கு அதிகாரம் அளித்து அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மறுநாளே எடப்பாடி பழனிசாமியை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் போது கூட்டணி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. எடப்பாடி பழனிசாமி வீட்டில் ஒன்றரை மணி நேரமாக நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.

பின்னணி என்ன

இந்த அடுத்தடுத்த பரபரப்புகளுக்கு மத்தியில், நயினார் நாகேந்திரன் இன்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். டெல்லியில் பெரும்பிடுகு முத்தரையருக்கு தபால்தலை வெளியீடு நிகழ்வில் பங்கேற்க செல்வதாக விமான நிலையத்தில் பேட்டி அளிக்கையில் நயினார் நாகேந்திரன் கூறினார்.

எனினும், தனது டெல்லி பயணத்தில் அமித்ஷா, ஜேபி நட்டாவை நயினார் சந்திக்க உள்ளார். அமித்ஷா நாளை மறுநாள் தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், நயினார் நாகேந்திரனின் இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+